பக்கம்:முன் பனிக் காலம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பாரதியர் பாட்டு பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை உண்ண்ம வெறும் புகழ்ச்சியில்லை’ என்று விளம்பினார். உலகினர். நலத்திற்காகவும் நம் முடைய பாதுகாவலுக்காகவும் அந்நூல்களின் சிறப்பை எடுத்துச் சொல்லுமாற்றால் தொண்டு. செய்ய வேண்டும் என விரும்பினார். தெருவெல்லாம். தேமதுரத் தமிழோசை நிரம்பியிருக்கவேண்டும் என் பது அவர் விழைவு. அதனால்: சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாங் தமிழ்முழக்கஞ் செழிக்கச்செய்விச் எனத் தமிழ் நண்பர்க்கு உரைத்தார். மேலும், கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்ச் கம்பன் பிறந்த தமிழ்நாடு வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து - வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை அள்ளுஞ் சிலப்பதி காரமென்றோர்-மணி. ஆரம் ப்டைத்த தமிழ்நாடு’ எனக் கூறிப் பெருமிதங் கொண்டார். ‘வாழ்க தமிழ் மொழி, வாழ்க தமிழ்மொழி, வாழ்க தமிழ்மொழி’ என வேறு உரைத்தார். எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே” என உரிமை பாராட்டிப் பேசினார். சொற்கள் எல்லாவற்றுள்ளுஞ் சிறந்த சொற்களைக் கொண்டுள்ளது தமிழ்மொழி எனக் கருதிய அவர், . . . ." - - 'சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா' என்று கூறியது வியப்பன்று.