பக்கம்:முன் பனிக் காலம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பாரதியார் பாட்டு ரூபஞ் செம்மை செப்’ ாைகவப் பயிற்சி செய்’ "இளமையைப் பாதுகாக்க வேண்டும்’ என்றும், 'முகத்தையும் உடலையும் அழகுபடுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் நினைத்தார் என்பது மேலே காட்டியவற்றாற் புலனாகும். மேலும் விநாயகர் நான் மணி மாலையில்,

உனக்கேஎன் னாவியும் உள்ளமுந் தந்தேன்.

மனக்கேதம் பாவினையும் மாற்றி-(எனக்கே )ே ண்ேடபுகழ், வாணாள், நிறைசெல்வம், பேரழகு, வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து” என்று சொல்லி விநாயகரை வேண்டினார். நீண்ட நாள் வாழ வேண்டும், நிறைந்த செல்வம் அடைய வேண்டும், மிக்க புகழ் பெறுதல் வேண்டும் என்று அவர் வேண் டியதன்றி மிக்க அழகும் வேண்டுமெனக் கேர்ரினார் என அறிகிறோம். அழகை வழிபடும் பெற்றி வாய்ந்த வர் பாரதியார் என்று சொல்வது புனைந்துரை ஆகாது. அழகென்னுங் கடவுளை ஒரு நாள் கனவிற். கண்டு, அதனோடு உரையாடினதாக அவர் பாடியுள்ளார். அப் பாடல்கள் மூன்றையுங் காண்க. அவர் வேண்டும்’ என்று விழைந்தவற்றுள் கனவு மெய்ப்பட வேண் டும்’ என்பதும் ஒன்று. அவர் கண்ட காட்சிகளில், தேவலோக இன்பங்கள் என்று சொல்லத் தக்கன் சில இருந்தன போலும் அவையெல்லாம் ஆவருக்கு இவ்வுலகில்தானே கிட்ட வேண்டும் என்ற அவாவும் இருந்தது என்பது, வானகம் இங்குத் தென்பட வேண்டும் என்று அவர் கூறியதிலிருந்து தெளி வாகும்.