பக்கம்:முன் பனிக் காலம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் பாட்டு 29 உலகத்தில் உள்ள பற்பல இயற்கைப் பொருட் களிலே அழகைக் காணலாம். உதாரணமாக, பூ, மலை, கடல், விண் ஆகியவற்றில் அழகின் நயந்தோன்றும்: செயற்கைப் பொருட்களிற் காணவேண்டுமாயின், மகளிரை நோக்குங்கள் என்று பாரதி கூறுவதுபோல் ஓரிடம் உளது:

மலரினில் நீலவானில் மாதாரர் முகத்தில்எல்லாம்

இலகிய அழகை ஈசன் இயற்றினான்.”

  • நாமகளைக் காண வேண்டுமாயின், வீணை செய் யும் ஒலியிற் பாருங்கள்; மாதர் தீங்குரற் பாட்டிற் யாருங்கள்' என்பன போன்ற சொற்களைச் சொல்லி யவர், திருமகளைக் காண வேண்டுமாயின், பொன்னில், மணியில், பூவில், சாந்திற் காணலாம்; அன்றேல், கன் னியர் நகைப்பிற் காணுங்கள்” என்று சொல்லுவார் போலச் சொல்லியுள்ளார்.

எனவே, பாரதியார் இன்பத்தில் நம்பிக்கையுடை யவர் என்பதும் இன்பம் பெற விழைந்தவர் என்ப தும் அறியப்படும்.