பக்கம்:முன் பனிக் காலம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 காணப்படாது காண்டல் காணாது, தான் மட்டும் அவன் குழவியை யாது செய் கின்றான் எனப் பார்த்துநின்ற படத்தைத் திருத்தக்க தேவர் தமக்குத் தத்துள்ளார். இனி, பெண்டிச் சிலருடைய இயல்பு பிறர் தம்மைக் காணுங்காற் காணாது, காணாக்கால் காண்பது என் பதைப் பண்டைத் தமிழர் கண்டறிந்திருந்தனர். இது பற்றியே திருவள்ளுவரும், 'யானோக்குங்காலை கிலனோக்கும் ; கோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும்’ என்க்" குறிப்பறிதல்” என்னும் அதிகாரத்திற் பொறித்து வைத்தார். நோக்கினாலும் நோக்காமல், நோக்காக்காலும் நோக்காமல் தலை குனிந்தோ, அன்றி வேறு பக்கம் பார்த்தோ புறக்கணித்துச் செல்லும் பெண்ணல்லள் உன்னை விரும்புபவள்’ என்பதை ஒவ் வொருவனும் அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர் கருதினர் போலும்! ஆனால், அக்குறளை அறிந்த சில விலைமாதரும் பிறர் நோக்காக்காலும் தாம் நோக்காது இருத்தல் கூடும். அதுபற்றி அவர் நல்லார் எனக் கோடலோ, அன்றிக் குலமகளிர் சிலர் பிறர் நோக்குங்காலும் தாமும் நோக்குதலால் நல்லரல்லர் எனக் கோடலே தவறாகும். பெரும்பான்மையும், பிறர் நோக்குழிப் பெண்டிர் தாணத்தால் தலைகுனிவர் என்பதும், பிறர் நோக்காத காலையில் தாம் அவரறி யாத வி த த் தி ற் பார்த்துக்கொள்வர் என்பதுமே கொள்ளக் கிடப்பது. இனி, தனக்கினிய தலைவனைக் காணும் பெண், நாணத்தால் வெட்கி முதலில் நோக் காள் என்பதும் ஈண்டறியத்தக்கது. அவன் தன்னை