பக்கம்:முன் பனிக் காலம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vʻ இதற்குக் காரணம் உண்டு. பண்டைத் தமிழர் இயற்கையில் கலந்து வாழ்த்தவர்கள். மனித வாழ்க்கையில் என்றும் அழியாமல் நிலை பெத்றிருக்கும் உண்மைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள். பண்டைத் தமிழ் இலக்கியங் களே இந்த உண்மைக்குச் சான்றுகள். இந்த இலக்கியங்களிலெல்லாம் பிசகாசிக்கும் உண்மை கள் நான்கு வகைப்படும் என்று காணலாம். அவையாவன : (1) இயற்கையின் எழில், (2) அற வாழ்வு, (3) காதல், (4) வீரம். இந்த நான்கு துறைகளின் வழியாய்ப் பழந்தமிழ்ச் தங்கள் வாழ்க்கையை ஒரு கலைபாய்ச் சித்தி ரித்து அனுபவித்தார்கள். தமிழ்நாட்டின் கலை வாழ்க்கையையும் அக் காலத்து மக்களின் மனப்பான்மையையும் பழைய தமிழிலக்கியங்களில் எல்லாம் காணலாம். இந்த அம்சங்களில் சிலவற்றை டாக்டர் சிதம்பரநாதன் செட்டியார் இக்கட்டுரைகளில் வெகு அழகாய்ச் சித்திரித்துக் காட்டியிருக்கின்றார். முன்பனிக் காலம்” என்னும் முதற்கட்டுரையிலே இயற்கை வின் ஓர் அம்சம் இன்பச் சுவையுடன் வர்ணிக்கப் பட்டிருக்கின்றது. "பெண்கள் பந்தாட்டம்” என்னும் கட்டுரையில் அக்காலத்துத் தமிழ்ப் பெண்களின் கலை வாழ்க்கையைக் காணலாம். இவ்விதமே ஒவ்வொரு கட்டுரையும் தமக்கு இலக்கிய இன்பத்தைக் கொடுக்கின்றது ; இத்