பக்கம்:முன் பனிக் காலம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கானப்படாது காண்டல் 33 அவன் பாராத நேரத்தில் தான் மட்டும் தனக்கினிய அவனைப் பார்த்து உள்ளத்தே கழிபேருவகை யெய் துவது தமிழ் மரபு என்பது முற்காட்டிய திருக்குறளால் விளங்கும். இங்கனம், பிறர் தன்னைக் காணாது தான் பிறரைக் காண்பதற்கு உதவியாயிருப்பன துண், கதவு முதலியன. இவற்றையே பெரும்பாலும் பெண்டிர் துணைக்கொள்வது கண்கூடு. இலக்கியச் சான்றாகப் புறநானூற்றில், - "சிற்றில் நற்றுண் பற்றி நின்மகன் யாண்டுளனோஎன வினவுதி' என்னும் அடிகளைக் காண்கிறோம். இதனால், காவற் பெண்டு என்ற செவிலித்தாய் ஒருத்தியை ஒரு சிறு பெண் தனக்குரிய அவளது மகன் எங்குச் சென் றிருக்கிறான் என வினவினாளென்றும், வினவியக்கால் அவள் ஒரு நல்ல துணைப் பிடித்துக்கொண்டு மறைய நின்றாள் என்றும் அறிகின்றோம். வினவப்பட்டார்க்குத் தான் தோன் ற ர து ஒரு புறம் மறைய நின்று இச்சிறுமி கேட்டது போன்ற இன்னொரு படத்தை நாம் காணக்கூடும். அது சிலப் பதிகாரத்தே இளங்கோவடிகளால் தீட்டப்பட்டுள்ளது. கண்ணகியும் கோவலனும் சிலம்பினை விற்று வாணி கம் செய்ய மதுரை நோக்கிப் புறப்பட்டவர்கள் காட்டு வழியே சென்று ஐயையது கோட்டத்தை அடைந்த வராக, ஆங்கு வேட்டுவ மகளாகிய சாலினி என்னுத் தேவாட்டி சீறடி நொந்து வருந்தியிருந்த கண்ண கியை நோக்கி, இவளோ, கொங்கச் செல்வி, குடமலை மு, கா-3