பக்கம்:முன் பனிக் காலம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jö காணப்படாது காண்டல் இன்னொரு சிறந்த படத்தை மருதக்கலியிற் காண லாம். பரத்தை காரணமாகப் பிரிந்து சென்ற தலைவ னால் நிகழ்ந்த நோயைத் தன் மகன் முகம் நோக்கித் தணித்துக்கொண்டு வந்தாள் ஒரு பெண். அவ ளுடைய புதல்வன் நடைவண்டியைச் செலுத்தி, நடை பயின்றுகொண்டு வந்தான். ஒரு நாள் அவனை அவள் எடுத்து அணைத்து உச்சி மோந்து, ' கண்ணே ! உன்னை வளர்க்குத் தாயார் உனக்குச் சொல்லிக் கொடுத்த சொற்கள் சிலவற்றைக் கூறு. அவை எனக்கு அமிழ்தம் போன்றிருக்குமே" எனக் கூறி னான். கூறிய அக்காலையில், அவளது தோழியும் உட் னிருந்தான். புதல்வனோ, "அப்பா, அப்பா’ எனச் சொல்லிக்கொண்டே இருத்தான். தாய்க்குச் சினம் உண்டாயிற்று. அவள் தோழியை நோக்கி, பார்த் தாயா இதனை ? கருணையற்ற அவர் இவன் வாயி னின்றும் நீங்கவே மாட்டேன் என்கிறார்!’ என்று சொல்லி, அவனைத் தனது தோளோடு சேர்த்து, அவன் வாயை அடக்க முயன்றாள். ஆனால், அவன் பின்னும், * அப்பா, அப்பா' என அழைத்தபடியே இருந்தான். திரும்பிப் பார்த்தனள் தாய். அவள் கண்டது யாது தன் கணவர் உருவம் அவர் வந்து முன்னரே ஆண்டு நின்று, தன் செய்கையைக் கண் ணுற்று வந்தார் என்பதை அறிந்தாள்: நாணினாள் : பேச்சை மாற்றினாள். அவளாற் காணப்படாமல் அவள் செய்கையைக் கண்டு நின்ற கணவர் மனத்தெழுந்த உணர்ச்சி காணப்பட்டுக் கண்டக்கால் நிகழ்ந்திராது என்பது உறுதி. -