பக்கம்:முன் பனிக் காலம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற் றுமை நீங்கில் அனைவர்க்குந் தாழ்வே,’ என முழங்கி னார் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார். 'ஒற்றுமை யாக உழைத்திடுவோம்; நாட்டில் உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்,' என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. நேசத்தாலே நாமெல்லோரும் ஒன்றாய் நின் றால், நிறைவாழ் வடைவோம் வாரீர்” என அழைத்தார் பாரதிதாசனார். இறக்கும் தறுவாயில் இருந்த முதியவர் ஒருவர் தம் பிள்ளைகளை அழைத்து, விறகை ஒவ் வொன்றாகக் கொடுத்தும், கட்டாகக் கொடுத்தும் ஒடிக் குமாறு பணித்தார் என்றும், ஒன்றை ஒடித்த பிள்ளை கள் கட்டினை முரிக்கக்கூடாத காரணத்தை வைத்து, அவர்களுக்கு ஒற்றுமையை உணர்த்தினார் தந்தையார் என்றும் சொல்லப்படுகிற கதை நம்மிற் பலர் அறிந் ததே. திருவள்ளுவரும் ஒற்றுமையின் அருமையை ஒர் உதாரணமுகத்தான் விளக்கியுள்ளார். ஒரு பெரிய வண்டி இருக்கிறது. அது வலிமை மிக்கதே எனினும், மயிற்றோகையை நிரம்ப நிரம்ப வாரி வாரிப் போட்டுக் கொண்டே யிருந்தால், தாங்காது அச்சு ஒடியும். தோகையோ மிகவும் நொய்ம்மையானது. வண்டியின் அச்சோ, மிகவும் பருத்து வலிமையுடையத்ாய் உள் ளது. எனினும், மேலும் மேலும் திரண்டு கூடித் தோகைகள் சேர்வதால், அச்சு இற்றுப் போகிறது. அதைப் போலவே, நாம் எத்துணை வலியராயினும், நம்