பக்கம்:முன் பனிக் காலம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுபட்டால் உண்டு.வாழ்வு 4}. வேண்டுமானால், இம்மாறுபாட்டை உடனே தவிர்க்க வேண்டாவோ? நீவிர் பொருவீரானால், தும் பகைவ ரெல்லாம் உடம்பு பூரித்து உவகை எய்துவர். அவர் உவகை நுமது இளிவரல் அன்றோ? நீர் போர் குறித்து நிற்பது நும் குடிக்கு ஏற்றதன்று.” நலங்கிள்ளி குடி க்கு வடு உண்டாகும், ” என்பதைக் கேட்டவுடன் போர்க்கோலம் நீத்தான். நெடுங் கிள்ளியும் புலவர் மொழியைக் கேட்டு இகலை விட்டான். இங்ங்ணம் ஒற்றுமைப்படுத்திய புலவரது பெயரை நாம் அறிய வேண்டாவோ ? வேண்டினும், அவர் பெயரை அறியோம்; ஊர் அறிவோம். அவ்வூர்ப் பெய. ராலேயே அவர் இற்றை நாள் வர்ை அறியப்படுகிறார். அவரை மறவாது இருப்போமாக ! கோவூர் கிழார் வாழ்க ! மற்றொரு புலவர் பாண்டிய மன்னன் ஒருவனுக்கும் சோழ மன்னன் ஒருவனுக்கும் ஓர் அறவுரை பகர்ந்: துள்ளார். அவர் காவிரிப்பூம்பட்டினத்துக் கா ரிக் கண்ணனார் எனப்படுவர். வெள்ளியம்பலத்துத் துஞ் சிய பெருவழுதி என்னும் அப்பாண்டியனையும், குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் அச் சோழனையும் ஒரு நாள் ஒருசேரக் கண்ட அப்புல வர்க்கு உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. உடனே அவர் பாடத் தொடங்கிவிட்டார். 'பால் நிறக் கடவுளும், நீல நிறக் கடவுளும் உட னிருப்பது போல உள்ள நீவிர் இருவீரும் இயைந்: திருப்பது, இனிது. அண்ணனும் தம்பியுமாகிய Lióð. ராமனும் கண்ணனும் ஒருங்கு இருப்பது போன்று