பக்கம்:முன் பனிக் காலம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 4ގް$ பும் போல இடையிடையே கடுஞ்சொல்லும் புகழ் மொழியும் பெய்து உரைத்த நயம் வியக்கற்பாற்று. அவர் அழைக்கும் போதே, அவன் பெருமையையும் வீரத்தையும், வெற்றியையும் உரைத்து அழைத்தார்; இடையிடை அவன் ஆற்றலின் சிறப்பைக் குறிக்கும் சொற்களைக் கூறினார்; உனக்குத் தெரியாததன்று, என்று சொன்னார். புகழ் விருப்பம் உள்ள அவன் பழி தரும் செயல் புரியலாகாது. என்பதை வற்புறுத் தினார்; புதல்வரை வெறுத்துரைப்பார் போன்று சில சொல் சொன்னார். இவையெல்லாவற்றினும் மிக்கதாக, “அம்ரில் விருப்பமுள்ள செல்வ’ என்றும், உன் வீரம் இப்பொழுது உன்னை விட்டு இருக்கட்டும்' என்றும் அவர் மொழிந்த மொழிகளின் சிறப்பைக் கண்டு நாம் மகிழாதிருக்க முடியாது. ஓர் அரசன் முன் நின்று, * நீ உன் புதல்வர்க்குத் தோற்றால்’ என்ற கூற்றைக் கூறுவது எளிதன்று. அரசன் வெகுளாதிருக்கும் பொருட்டும், வெகுண்டு புதல்வரையே அழித்துவிடா திருக்கும் பொருட்டும் எழுச்சியைத் தடுக்கும். பொருட் டும் அன்றோ அத்தண்டமிழ்ப் புலவர்,

  • அமர்வெஞ் செல்வ! நீயவர்க்கு உலையின் இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையுே; அதனால், ஒழிகதில் அத்தைகின் மறனே

என இருமருங்கும் சர்க்கரையைக் கூட்டி இடையே கடுக்காய்த் தூளை வைத்தார். இங்கனமெல்லாம். நன் மருந்து தரவல்ல நாவலர் பலர் வாழ்ந்த நாடு நம் நாடு. அவர்தம் ஊர் பேர் நல்லுரைகளை மறிந்துள்ள நாம் இனியாவது விழித்துக் காண்போமாக். அவர்தம் பொன்னுரைகளை அறிந்து வாழ்வம் ஒன்றாகவே!