பக்கம்:முன் பனிக் காலம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(6 . நாட்டுப் பாடல்கள் நாட்டுப் பாடல்களில் ஒரு நாட்டினரின் சிறந்த கருத்துக்களில் சில விளங்கப் பெறுதல் இயல்பு. முற். காலத்தில் எழுந்த நாட்டுப் பாடல்கள் பொருள் நிரம்ப இல்லாதனவாய், எப்படியாவது அந்நேரத்துத் துன் யத்தைப் போக்கக்கூடியனவாக அ ைம ந் தி ரு ந் தன எனக் கூறுதல் கூடும். காட்டாக, கடுமையான வேலை செய்கிற மக்கள் அக்கடுமையினின்று விடுபடுவதற்காகச் சில சொற்களைச் திரும்பத் திரும்பக் கூறிப் பாடுதலைக் கூறலாம். வேலையினது கடுமை தெரியாமல் இருக்கும் பொருட்டு, நாற்று நடுகின்ற பெண்டிர், சாந்து அரைக்கும் மகளிர், கல்லுடைக்கின்ற ஆட்கள், எற்றம் இறைக்கும் பேர்கள், வண்டி தள்ளும் ஆட்கள்,- இவர் கள் சில ஒலிகளை ஒருசேர எழுப்பிக் களைப்பினைப் போக்கிக்கொள்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அப்பாடல்களைத் திரட்டி வெளியிடுவது விரும்பத்தக்கது. அப்பாடல்கள் சிலவற்றில் அருங்கருத்துக்கள் சில இருத்தல் கூடும். முற்காலத்திலே, பேச்சு மொழி தோன்றுதற்கு முன்னால், மகிழ்ச்சியுற்ற மக்கள் எழுப்பிய, ஒலிகள்ே பிறகு சொல்லாக, மொழியாக மாறின என மேனாட்டு அறிஞர்கள் பலர் சொல்வார்கள். ஆதலால், பொருளற்ற சாதாரண ஒலிகளே ஒரு காலத்தில் மொழிக்கு அடிப்படை யாக இருந்தன என்பது அறியப்படும். அத்தகைய