பக்கம்:முன் பனிக் காலம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நாட்டுப் பாடல்கள் இல்லையே என்றெல்லாம் தினைப்பதே இல்லை. இப்பாட்டின் சொல்லொலி நயத்தில் ஈடுபட்டு விடுவோம்.ஆதலால், அதிவு வேலை செய்வதில்லை. இந்த விதத்திற் பல பாடல்கள் அமைந்து இருக்கின்றன. காட்டாக, .

பாண்டத்தைக் கழுவிப் பனிநீர் உலைவார்த்து

முத்துப்போற் சோறு வடித்தாள் இளங்கொடியாள்: அத்தி விறகொடித்துத் தித்திக்கப் பால்காய்ச்சிப் புத்துருக்கு நல்லநெய்யும் பொன்போற் பருப்புகளும் அதிரசமும் தேன்குழலும் அறுசுவைப் பண்டங்களும் பத்துவிதக் கறியும் பதினெட்டுப் பச்சடியும் ஸ்டுவித்க்கறியும் இயலான பல்குழம்பும் முப்பழமுஞ் சர்க்கரையும் அப்பளமும் தான்படைத்து ஆயாசம்திரவே பாய்ாசக்தர்ன் கொடுத்தாள்’ என்று ஒரு பாட்டு இருக்கிறது. இதைக் கேட்கும் போது எவரும் இவ்வளவும் அப்படியே படைக்கப் பட்டன என்று நினைத்துவிடுவது இல்லை. ஒரு நல்ல உண்டி படைக்கப்பட்டது என்றே நினைக்கிறோம். பெரிய விருந்து நடந்தது என்று சொல்லத் தக்கதை இச்சொற்களால், பெருக்கி மடக்கிச் சொல்லுந்திறன் அப்பாட்டிற் காணப்படுகிறது. - ஆண்பிள்ளைகளை வாழ்த்துதற்குப் பரம்பரையாக ஒரு பாட்டை நாட்டுப்புற மக்கள் கையாளுகிறார்கள். வாழ்வாய், வளர்க்திடுவாய், வையகம் பெற்றிடுவாப் நிற்ப்ாய் நிலைதரிப்பர்ப்ளேரசை யாண்டிடுவாய். கற்பதித்த துண்போலக் கலங்காது அரசாள்வாப் விற்பதித்த தூண்போல வெகுநாள் அரசாள்வாய் போருக்குப் போய்விடுவாப் பொழுதோடே வென்றிடுவாய்