பக்கம்:முன் பனிக் காலம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 'முன்பணிக் காலம்’ முதலிய கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தக வடிவில் தருதல் வேண்டும் என என் நண்பர்கள் பலர் அடிக்கடி வற்புறுத்தினர். அதனால், இஃது இப்பொழுது வெளியிடப்படு கிறது. இப்புத்தகத்தில் அடங்கிய கட்டுரைகள் 1,6,7,9,10,11,13,15 ஆகியவை முன்னர்த் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பப் பெற்றவை. அவற்றை வெளியிட்டுக்கொள்ள வானொலி நிலையத்தார் அன்புகூர்ந்து இசைவு தந் தனர். அவர்கட்கு என் நன்றி உரியது. ஏனைய கட்டுரைகள், 'செந்தமிழ்ச்செல்வி’ பொன்னி’, கவிமணி மலர்', அணிகலம்’ போன்ற தர்ள்களில் வெளிவந்தவை. இவற்றை ஒரு புத்தக வடிவில் வெளியிட முன் வந்த திரு. பழனியப்பர் அவர்கட்கு என் நன்றி உரியது. அன்றியும், இதற்கு அணிந்துரை நல்கிய தமிழ்ப்பெரியார் உயர்திரு. டாக்டர் ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கட்கு என் உளமுவந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன் அ. சிதம்பரநாதன்