பக்கம்:முன் பனிக் காலம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுப் பாடல்கள் 53 பகைத்தார்கள் பூமுடியைப் பருந்தாட்டம் ஆட்டிடுவாய் சினத்தார்கள் பூமுடியைச் செண்டாட்டம் ஆட்டிடுவாப் வென்ற களரியிலே வீரபட்டங் கொண்டிடுவாய் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்திடுவாய்” எனச் சொல்வதிலிருந்து வாழ்த்தப்படும் மக்களுடைய முன்னேற்றத்திலும் உயர்விலும் மேன்மையிலும் வாழ்த்துகிறவர்கள் எவ்வளவு விருப்பமுடையவர்கள் என்பது விளங்கும். இந்தப் பாட்டிலே, போருக்குப் போய்விடுவாய், பொழுதோடே வென்றிடுவாய்” என்று வாழ்த்துவது சிறப்பாக நோக்கத்தக்கது. போருக்குப் போய் உன் கடமையைச் செப்து நாட்டினைப் பாதுகாப்பாயாக என்று அறிவுறுத்து கின்ற திறத்தால், நாட்டுப் பாடல்களில் அருங் கருத்துக்கள் உண்டு என்பது அறியப்படும். போருக்குப் போ' என்ற அளவிலே நிற்குமாயின், அது வாழ்த்தாகாமல் இருக்கலாம்; போய் வா’ என்று கூறுவதால் இது வாழ்த்தே ஆகும். போருக்குப் போய்விடுவாய், பொழுதோடே வென்றிடுவாய்” என்பதால், வென்று விரைவில் திரும்பி வருக என்ற உட்கோள் இருப்பது அறியப்படும். இதைப் போன்ற பல்வேறு வாழ்த்துப் பாடல்களும் உண்டு. மழை நன் றாகப் பெய்ய வேண்டும் என்று நாட்டுப்புற மக்கள் கூட்டமாகக் கூடி வேண்டுவதைப் பார்த்தால் மழை பெய்தே விடும்போல இருக்கும்.

  • தெக்கணா பூமிக்குக் குற்ற மின்றித்

திங்கள் மும்மாரி பொழிய வேண்டும் மாத மும்மாரி பொழிய வேண்டும் வல்லவளே தாயே சக்கம் மாளே