பக்கம்:முன் பனிக் காலம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 § நாட்டுப் பாடல்கள் பேசவில்லை போலும் என்று ஐயுற்றேன். போகிறான். நானும் தொடருகிறேன்.

  • கொள்ளவரும் மாப்பிள்ைைள்க்குக் குறடா கொடுப்பேன் (என்றேன் ஆளவரும் சம்பந்தியை அடிப்பேனென்றேன் சேருபந்தால் கலியாணம் என்றவரைக் கண்ணைப் பிடுங்கிடுவேன் என்று விருதுகட்டி எல்லையர சாண்டேனே.”

இப்படிப் பேசிக்கொண்டே போகிற அவளுககு ஒரு கால் மனக்கலக்கம் உண்டோ என்று ஐயங் கொண்டவனாக நான் மெல்ல நடந்துபோகவும், அவள் பின்னே திரும்பிப் பாராமலே மேலும் என்னென்னவோ சொல்லிக்கொண்டு போகிறாள். "அல்லிமெல்லி யென்றான் அனந்தலிலே பெண்ணே . (யென்றான் பானைபோலத் தாலி கட்டிப் பறையன்மகன் - (போனானே.” என்றது என் கனதில் விழுந்தது. ஆ, ஆ! அல்லியா இவள்? இதுவரை என்னவோ நினைத்துக்கொண்டிருந்தேனே என்று கருதினேன். அதற்குள்ளாக, எதிரே வந்த யாரோ ஒருவன் எங்கே ஐயா இவ்வளவு தூரம்?’ என்று கேட்டுவிட்டான். அவள் திரும்பிப் பார்த்துவிட்டு உடனே மாயமாய் மறைந்துவிட்டாள். அன்றிரவு எனக்கு உறக்கம் பிடிக்கவில்லை. எப்பொழுது பொழுது விடியும் என்று பார்த்திருந்: தேன். காலையில் கடைக்குப் போய், அல்லியரசாணி மாலை வாங்கி வந்தேன். எவ்வளவு அழகான நாட்டுப் பாடல் இஃது என்று நினைத்து நினைத்து வியந்தேன்.