பக்கம்:முன் பனிக் காலம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நாட்டுப் பர்டல்கள் பவளத் தேர் கொண்டுவரச் சொன்னாள். அவன் மூன்று நாளிலே மீண்டு வருவதாகப் போனவன் பதினாறு நாளாகியும் வரவில்லை. மைந்தன்மேல் ஆணையிட்டு மாபாவி போனானே ஆனை மறந்தவனும் ஆர்மேலே ஆசைகொண்டான் எமலோகம் போனாலும் இட்டுவந்து சங்கரிப்பேன்" என்று சொல்லிக்கொண்டு மைந்தனை யிடுக்கி மாதரசி போகிறாள். வெகுதூரம் தாண்டிச் சென்றதும், பவளம் விளையும் பாங்கான காடு வந்தது. எங்கள் ஐயா போனது இக்காடோ ஆச்சி” என்று பிள்ளை கேட்டான். ஐயா என்று சொல்லவே, அடித்தாள் தவடையிலே. அருச்சுன்ன் செப்த சூளுரைக்கு மாறாகப் பவளக்கொடியோடு தங்கிவிட்டமை தப்பு தான். கொடுத்த வாக்கிற்கு மாறாக நடந்தவரை, 'ஐயா” என்று சொல்லுவது எனோ எனக் கோபம் வரு வதும் இயல்புதான். ஆனால், அதற்காகக் குழந்தையை அடிப்பதென்றால், அல்லியின் மனம் கல்லோ இரும்போ என்று கேட்கும்படி இருக்கிறது. இப்படிப் பட்ட அல்லியின் பேர்சொன்னால் என் அழுத பிள்ளை வாப் மூடாது? இதையெல்லாம் பார்த்த பிறகுதான், அல்லியென்று பேர்சொன்னால் அழுதபிள்ளை வாய் மூடும் அல்லியென்று பேர்சொன்னால் அண்டம் கிடுகிடென்னும் அல்லியென்று பேர்சொன்னால் கல்லுத்தெய்வம் (கூத்தாடும்” என்பதன் முழு உண்மை வெளியாயிற்று. அல்லியரசாணி மாலை, பவளக்கொடிமாலை, புலந் திரன் களவு, புலந்திரன் தூது முதலிய நாட்டுப்பாடல் கள் படித்து இன்புறத்தக்கவை.