பக்கம்:முன் பனிக் காலம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Z. பெருங்கதை பெருங்கதை தமிழ்க் காப்பியங்களில் ஒன்று; கொங்குவேள் என்பவரால் ஆயிரத்திருநூறு ஆண்டு கட்கு முன்னால் எழுதப்பட்டது. இதில், உதயணன், வாசவதத்தை என்பாருடைய கதை சொல்லப்படு கிறது. உதய காலத்திற் பிறந்ததால் அரசகுமாரன் ஒருவன் உதயணன் எனப்பட்டான். வாசவனாகிய இந்திரன் அருளாற் பிறந்தமையால் அவள் வாசவ தத்தை எனப்பட்டாள். வத்சதேசத்து மன்னவன் புதல்வனாய்த் தோன்றிய உதயணன் வியக்கத்தக்க யானை ஒன்றைத் தன்வசம் ஆக்குகிறான். ஒரு நாள் அதற்கு முன்னால் உணவு கொடுக்காமல் அவன் உண்ட காரணத்தால், அவ் யானை அவனை விட்டு நீங்குகிறது. அதைத் தேடிக்கொண்டு போன உதயணன் பகையரசன் பிரச்சோதனன் என்பானாற் சிறைப்படுத்தப்படுகிறான். அப்பகைவன் மகளே வாசவ தத்தை. உஞ்சையிற் சிறையிருக்குங்கால் அங்கே மதவெறிகொண்ட பட்டத்து யானையை அடக்கிய பிறகு, உதயணன் வாசவதத்தைக்கு யாழ் கற்பிக்க நியமிக்கப் பெறுகிறான். பிறகு ஒரு நாள் பத்திராவதி யென்னும் ஓர் அபூர்வ யானையின்மீது வாசவ தத்தையை எற்றிக்கொண்டுப்ோய் மணம் புரிந்து கொண்டு சயந்தியில் வாழ்கிறான். அவளோடு இன்பம் நுகர்வதிலேயே காலத்தைக் கழிக்கும் உதயன்னை நல் வழிப்படுத்தும் பொருட்டு அவ்ன் நண்பனும் அமைச்சனுமாகிய யெளகந்தராயணன் வாசவதத்தை மு. கா.-5