பக்கம்:முன் பனிக் காலம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பெருங்கதை - வ ச வ த த் ைத தீக்கிரையானதாகக் கருதிய உதயணன், ‘என்னை விட்டுப் போதியோ!' என்று அரற்றியும் உரற்றியும், வீழ்ந்தும் எழுந்தும் கண்ணிர் சொரிந்து கதறுகிறான். பிறகு, அடிக்கடி அவளைப் பற்றி நினைப்பவனாகிறான். காடு வழியே போய்க் கொண்டிருக்கும் ஒரு நாள், ஒன்றிய தேவியை உள்குவான் ஆகி அவன் நைந்த விதத்தைப் பெருங் கதை பின் வருமாறு கூறுகிறது. மான் பிணையைப் பார்த்து,

மான்மடப் பிணையே வயங்கழற் பட்ட

தேனேர் கிளவி சென்ற உலகம் அறிதி யாயின் பாமும் ஆங்கே குறுகச் செல்கம் கூறாப் எனவும்: புறாவினைப் பார்த்து, "வாசவ தத்தை யுள்வழி யறியின் ஆசை தீர அவ்வழி அடைகேன்’ எனவும், இதைப் போலப் பிறவற்றையுங்கூறி, அவல் நெஞ்சமொடு அறிவு மயங்கிய அரசனை அவன் நண்பர் தேற்றி, மகத நாட்டிற்கு அழைத்துச் சென் றார் என்று படிக்கிறோம். - . . . வாசவதத்தை, பதுமவாதி ஆகிய இருவருள்ளும் வாசவதத்தையே தனது கணவன் பிற மகளிரொடு நேயங்கொள்வதைப் பொறாதவள் என்பது பெருங் கதையால் விளங்குகிறது. விரிசிகையென்னும் முனி மகளுக்கு உதயணன் பூச்சூடியதை அறிந்தவுடன் அவளுக்கு உண்டாகும் கோபம் அதிகம், பதுமா வதியை மணந்துள்ளான் அரசன் என்று அறிந்ததும் அவள் ஊடுகிறாள். பந்தாட்டத்தின் பிறகு அரசன்