பக்கம்:முன் பனிக் காலம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்கதை 69. தேவியாரைக் காண வேண்டும் என்று சொல்லிட அழகிற் சிறந்த மானனீகையென்னுந் தோழியை மறைத்தே வருகிறாள். அப்பெண்ணைத் தோழியர் கூட்டத்திற் காணவில்லையே என்று அவன் கேட்டதுங் கண் சிவப்புறுகிறாள். மானனீகையை உதயணன் மணக்க வாசவதத்தை இசைந்தே இராள், அவள் தனது தங்கையே என்பது வெளிப்படாதிருக்கு மாயின். ஆனால், பதுமாவதியோ அவ்வளவு பொறாமை விளங்கிய யாழில் தானும் பயிற்சி பெற விழைந்ததாகப் பதுமாவதி ஒரு நாள் உத்பன்னிடத்தே கூற, அவன் வாசவதத்தை இறந்ததற்கென வருந்தி ஒன்றுஞ் சொல்லமாட்டாதவனாய் இருந்த நிலையில், அவன் கலக்கத்தை அறிந்த பதுமாவதி புலத்தல் பாவதும் பொருத்தம் இன்று” என நினைத்து, வேறு செயல் ஆற்றச் செல்பவள் போல் அவ்விடம் விட்டு அகன் றாள். அவனுக்கு மேலும் மேலும் வருத்தந் தரலா காது என்பதே அவள் எண்ணம்: வாசவதத்தை உயிர் பெற்று வந்ததும் அவளை வணங்கினாள் பதுமாவதி. பின்னரும், பல மாதம் அவளோடு. உதயணன் கூடி யிருத்தல் வேண்டும் என்று. வேண்டிக்கொண்டாள்; பெருந்தகு கற்பினெம் பெருமகள் தன்னொடு பிரிந்த திங்கள் எல்லாம் பிரியாது ஒருங்கவண் உறைதல் வேண்டுவல் அடிகள்.” என்றவிடத்து, மூத்தாளைப் பெருந்தகு கற்பினள் என்று அவள் போற்றியது. நோக்கத்தக்கது.