பக்கம்:முன் பனிக் காலம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. முன்பனிக் காலம் தமிழிற் காலங்களைப் பெரும்பொழுது என்றும், சிறுபொழுது என்றும் ஆசிரியர் பிரிப்பர். ஆண்டினை ஆறு பகுதியாக்கி, ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு பெரும்பொழுது என்பர். நாளினை ஆறு பிரிவாக்கி, ஒவ்வொரு பிரிவையும் சிறுபொழுது என்பர். பெரும் பொழுதுகளாவான : கார், கூதிர், முன்பணி, பின்பனி, இளவேனில், முதுவேனில் எனப்படுபவை. இவற்றுள் ஒவ்வொன்றும் இரண்டிரண்டு மாத அளவு உடை யது. முன்பனிக் காலமென்பது மார்கழி, தை மாதங் களின் காலமாகும். - - மழை பெய்யும் பருவம் கார்கால்ம் எனின், குளிர் காற்று வீசும் பருவம் கூதிர்காலம் எனின், சாயுங் காலத்திலிருந்து நள்ளிரவு வரையில் பனி துளிக்கின்ற பருவம் முன்பனிக் காலம் எனப்படும். மார்கழி, தை மாதங்களில், இரவில் முற்பகுதியில் பனி மிகுகின் றதை நாம் இன்றும் கண்ணாரக் காண்கிறோம். இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்குப் பார்த்தால், புகை சூழ்ந்திருப்பது போல ஒரு தோற்றங் காணப்படும். புள்ளி புள்ளியாகச் சிறு பனித்திவலைகள் விழுந்து பூக்களை நிரப்பிக்கொண்டிருக்கிற காட்சியை இக் காலத்தே பார்க்கலாம். இதனைக் கண்ட கழாக்கீர னெயிற்றியார் என்னும் புலவர்,