பக்கம்:முன் பனிக் காலம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பெருங்கதை கூறுகிறான். அப்போது உண்மையிலேயே சாமி வந்து ஏறியதொரு காட்சியைக் காட்டுவார் போலவே கொங்குவேள் கதையை எழுதுகிறார்.

கொடும்பூண் மார்பில் கூந்தல் பரப்பிப்

பிடிக்கை பன்ன பெருந்தோள் ஒச்சி இடிக்குரல் முரசின்முன் எழுந்தன்ன் ஆடி விழாக்கோளாளரைக் குழாத்திடைத் தரீஇத் திருரோட்டணி மருவி ராயிற் பினக்குறை படுத்துப்பிளிறுபு சீறி - இன்றுஞ் சென்றியான் குஞ்சரம் புகுவல்.” என்ற அடிகளால் அந்த ஓவியத்தைத் தீட்டுகிறார். உதயணன. கவலையின்றி இருப்பதாகச் சொல்லப் படும் ஓரிடமும் சொல்லோச்ையாலேயே அப் பொருளைக்கொடுப்பதாய் உள்ளது. வாசவதத்தையை மணந்தபின், பகலிரவு அறியானாய், இன்பம் ஒன்றே துய்ப்பவனாப், தன் நாட்டைப் பகைவன் பாஞ்சால அரசன் ஆருணி ஆள்வதைக் கருதானாய், தின் தம்பியர் அரசிழந்திருப்பதையும்.நின்ையன்னாப், கவலை யின்றி இருக்கிறான் என்பதை, இடபகன் என்னும் அமைச்சன், மற்றோர் அமைச்சன். ஆகிய யூகிக்குத் தெரிவிக்கிறான். அவ்வேளையில் பெருங்க்தை கூறுஞ் சொற்கள் அக்கவலையின்மையை ஒலியினாலேயே காட்டுகின்றன. - 'ஆருணி அரசன் ஆள்வது மறியான் தன்னுயிர் அன்ன தம்பியர் கினையான் இன்னுயிரிடுக்கண் இன்னதென் றறியான் செவ்வியுங் கொடா அன் இவ்வியல் புரிந்த்ன்ன்” என்ற இடத்தை நோக்குக.