பக்கம்:முன் பனிக் காலம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்கதை 73: மானனீகை அடித்து எழும்பிய பந்துகள் நிலத் திற்பட்டு ஆகாசத்தில் ஓங்கிய செய்தியைக் கூறு கின்ற இடத்து, பந்தின் விரைவையும் மானனீகை யின் விரைவையும் பெருங்கதை சொல்லொலியால் வருணிக்கின்ற அழகு நயக்கத்தக்கது. “மாறுமா றெழுந்து மறிய மறுகி ஏறுப இழிப ஆகாய நிற்பன 幽*@影*斯w唯*** $*帖w W*娜餘會換$ ஒப் Lü ஒசியா ஒல்காப் - பாடாப் பாணியின் நீடுயிர்ப் பினளாப்" என்றதைக் காண்க. பந்து அடிக்கடி அடிக்கப்படுவது போன்ற எண்ணம் இவ்வடிகளைப் படித்தவுடன் உண்டாவது திண்ணம். மானனிகை உதயணனொடு கள்ள நட்புப் பெற்ற தற்காக அவள் கையைக் கட்டி வருத்தினாள் வாசவ தத்தை பிறகு, தனது தங்கை யென்பதை யறிந்துகொண்டவுடன், தத்தை கண்ணிர் பெருக்கிப் பிழை செய்ததற்காக இரங்குகிறாள். அப்பொழுது பெருங்கதை உரைக்குஞ் சொற்களே அழுகையைப் புலப்படுத்திவிடுகின்றன. 'குழுஉக்களி யானைக் கோசலன் மகளே அழேற்கவெம் பாவாட் அரும்பெறல் தவ்வை செய்தது பொறுவெனத் தெருளாள் கலங்கி, விம்மி விம்மி வெய்துயிர்த்தென்குறிை எம்முறை செய்தேன் என்செய் தேனென மாதர்க் கண்ணிர் மஞ்சன மாட்டி ஆதரத் துடைந்தனன் பேதைகண் துடைத்து' என்ற அடிகள் அவலச் சுவையைக் காட்டுகின்றன அல்லவா? பல கருத்துக்களுக்கு ஏற்ற வகையிற். பாடக்கூடிய பலவித ஓசையையுடைய விருத்தம்