பக்கம்:முன் பனிக் காலம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்ப் புலவர் சிறப்பியல்புகள் 77 நா’ என்ற வகையாற் புலப்படுத்துகின்றார். என் நா? எனச் சொல்ல வேண்டிய இடத்து அவர், எம் நா’ எனக் கூறியது இக்காரணத்தால் என்க. வாய்மை பேசுவதில் மகிழ்ச்சி யுடையார் என்பதைப் புலப்படுத்தத் தமது நாவைச் செவ்விய நா என்றே கூறு கின்றார். மக்கள் எல்லோருக்கும் உள்ள அளவுதான் தம் நாவும் இருக்கிறதென்பதையும், யாவரும் வாய்மையே பேச முயன்றால், அம்முயற்சி கைகூடும் என்பதையுங் காட்டுவார்போல, எனது நா மிகப் பெரிய தொன்றன்று, சிறியதே' எனக் கூறுபவராய், எஞ்சிறு நாஃ.எனச் சொல்லியதைக் காணுந்தோறும் மகிழ்ச்சி உண்டாகிறது. இவவாறு கூறிய வன்பரணர் போன்று வாய்மையறம் பேணி வாழ்ந்த பழந்தமிழ்ப் புலவர் பலர். அக்காலப் பு ல வ ர் க ள் திருப்தியுடையவ்ராப் வாழ்ந்தவர் என அறிகின்றோம். எத்துணைப் பொருள் பெற்றாலும், மேலும் மேலும் திரட்ட வேண்டும் எ ன்னு ம். அவாவுடையாரைப் போன்றன்நிப் பெற்றதன் கண்ணே மகிழ்ந்து பிறர்க்கு வழங்கியும் வாழ்ந்தார் என அறிகின்றோம். பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி ஒம்பாது உண்டு கூம்பாது வீசி’ வாழ்ந்தவர் என அவர்கள் காணப்படுகிறர்கள். பொருளை நிரம்பப் பெற்ற புலவர் ஒரு வர்த்தம் மனையாட்டியை நோக்கி, "நாம் நன்றாக வாழவேண்டும் என்று நினைத்துப் பூட்டி வைக்காமல், யாருக்குக் கொடுக்கலாம் என்று என்னோடு கலந்து ஆலோசியாமல், நீயும் எல்லோர்க்குங் கொடுப்பாயாக, தானும் கொடுப்பேன்’ என்று கூறுகின்றார்.