பக்கம்:முன் பனிக் காலம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பழந்தமிழ்ப் புலவர் சிறப்பியல்புகள் செய்ய வேண்டும் என்ற உயரிய குறிக்கோள் இல்லா தாரை வெறுத்தார்கள். அதனால்தான், ஆலந்துச் கிழார் என்னும் புலவர் “பூட்கை யில்லோன் யாக்கை போல’ என வெறுத்துரைத்தனர். “நல்ல மேற். கோள் இல்லாதவனுடைய உடம்பு பொலிவற்றுப் புல்லென்று இருத்தலைப் போல’ என உவமையாக வழங்க வேண்டும் என்றால், உயரிய குறிக்கோள் உடையராக மக்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எத்துணைப் பெரிய அளவு புலவரிடம் குடி கொண்டிருத்தல் வேண்டும் ! முயற்சி எடுக்குங்கால், உயரிய பொருள்களின் பொருட்டு அஃது எடுக்கப்பட் வேண்டும் என்ற குறிக் கோள் உடையராய்ப் புலவ்ர் பலர் காணப்பட்டனர். அதனால்தான் ஒரு புலவர் கயானையை ே வட்டையாடச் ச்ெல்கிறவன் சில வேளைகளில் யானையையும் பெறு தல் கூடும்; காடை, கவுதாசி முதலிய சிறு ப்றவைகளை நாடிப் போகிறவன் சில் வேளைகளில் அப்பறவை. களும் பெறாமல் வறிதே திரும்பவும் கூடும்: ஆதலால், உயர்ந்த பொருட்களினிடத்தே விருப்பம் வைக்க வேண்டும்” என்ற கருத்துப்படக் கூறினார். யானை வேட்டுவன் யானையும் பெறும்ே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே” என்றார். இக்கருத்தினாலேயே திருவள்ளுவரும், உேள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், மற்mது தள்ளினும் தள்ளாம்ை நீர்த்து’ என்றார். செய்யக் கருதுவதை, உயர்ந்ததாக எண்ணி, அஃது எதாவது காரணத்தாம். கிடைக்கப்பெறாது போய்விட்டாலும் மக்கள் பழிக்கப்படமாட்டார் என்