பக்கம்:முன் பனிக் காலம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்ப் புலவர் சிறப்பியல்புகள் 81 பதே கருத்து. விண்ணிடத்துக் குறிவைத்துச் சுடு கிறவன் தவறினாலும், மரத்திடத்துக் குறிவைத்துச் சுடுகிறவனைவிட உயரமாகவே சுடுவான் ஆதலால், உள்ளத்தில் தளர்ச்சி வேண்டா” என ஜியார்ஜு ஹெர்பர்ட்டு (George Herbert) கூறியுள்ளதும் சண்டு ஒப்பு நோக்கத் தக்கது. 'கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவே லேந்தல் இனிது” என்னும் திருக்குறளும் இக்கருத்தானே எழுந்தது. எலி போன்ற சிறு முய்ற்சி உடையார்ை இகழ்ந்தும் புலி போன்ற பெரு முயற்சி உடையான் கதி புலவர் ஒருவர்களின்ர் (புறநானூறு-ச்ெப்புள் 190). எனவே, தாளாண்மை உடையர்ரைப் புலவர் பாராட் டினர் என்பது பெறப்படும். புலவர் சிலர் வறிய்ராப்ப் பேசப்படுதல் காரண மாகப் பண்டைத் தமிழ்ப் புலவர் அனைவரும் வறிஞர் என எண்ணுதல் ஆகாது. புலவர் பலர் வெவ்வேறு தொழில் ... இயற்றுவாராப்ப் பெரும்பொருள் படைத் திருந்தனர். கூலவாணிகன் சித்தலைச் சாத்தனார், அறுவை வாணிகன் நல்வேட்டனார், மருத்துவன் தாமோதரனார், கொல்லன் அழிசி, எழுத்தாளர் சேந்தன் பூதனார், கணக்காயர் தத்தனார் முதலிய புலவர் பெயரே அவரவர் தொழிற்றிறத்தைக் காட்டும். சோழன் நல்லுருத்திரன், ப்ாண்டியன் நெடுஞ் செழியன் சேரமான் கணைக்கால் இரும்பொறை முத லான அரசர்கள் புலமையுடையராய், மிக்க மான முடையராப் வாழ்ந்த திறம் பலர் அறிந்தது. இன்னோரன்ன பழந்தமிழ்ப் புலவருடைய சிறப் பியல்புகளை முழுவதும் அறிய வேண்டுவோர் புறநா னுற்றுப் பாடல்களை ஊன்றிப் படிப்பார்கள்க! மு. கா.-6