பக்கம்:முன் பனிக் காலம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 முன்பனிக் காலம் "புகையுறப் பள்ளி நுண்துவலை பூவகம் நிறைய’ என அகநானூற்றுப் பாடல் ஒன்றில் மொழிந்துள் ளார். அவரே இன்னொரு பாட்டில், பஞ்சினுடைய துய்யைப் போலப் பணி துளவிச் செல்கின்றவாற்றைக் குறிப்பிட்டுள்ளார். சிறு திவலைகள் முன்பனிக் காலத் திலே பொழியப்படுமென்பது நப்பூதனார் என்பாரால் முல்லைப்ப்ாட்டிலும் பேசப்பட்டுள்ளது. எதிர்செல் வெண்மழை ப்ொழியுந் திங்களில்” என்ற்தைக் காண்க. களாவின் புதரிலுள்ள முள்ளிடத்தே அழகிய முத்துக் கோத்தால் ஒப்பப் பணித்துளிகள் சிந்திக் கிடக்கின்ற காட்சியை நுகர்ந்த புலவர் ஒருவச் பாண்டிக்கோவையில், கனியார் களவின் அகமுட் கதிர்முத்தங் கோப்பனபோற் பனியார் சிதர்துளி மேற்கொண்டு நிற்கும் பருவங்களே என உரைத்தார். இன்றும் ஒருவர் விரும்பினால் இக் காட்சியைக் கண்டு களிக்கக்கூடும். அவர் அதற்காக இரவில் மரஞ்செடி கொடிக்ளிடஞ் செல்ல வேண்டுவ: தில்லை. அதிகாலையில் எழுந்து சென்று பார்த்தாந்: போதும். சில இலைகளின் ஓரத்தே இரண்டு பக்கங் களிலும் வெள்ளிய முத்துகள் அடுக்கி வைத்தாற் போன்றுள்ள அழகிய காட்சியை நானும் கண்டு. மகிழ்ந்திருக்கிறேன். அக்காலை, இப்புலவர் சொல்லிய சொல்லின் உண்மை வெளிப்பட்டது. இவரைப் போன்று இயற்கை எழிலைக் கண்டு மகிழ்ந்து வாழ்ந்த புல்வர்கள் பண்டைத் தமிழ்நாட்டிற் பலர் இருந்தனர். அவர்களால் இயற்றப்பட்டுச் சங்கச் செய்யுட்கள் என்ற பெயரால் வழங்குகின்ற பாட்டுகளில் இயற்கை நலம் மிளிருகின்றது. இக் காலத்து வாழ்கின்றவருட்