பக்கம்:முன் பனிக் காலம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபும் இலக்கிய வளர்ச்சியும் 85. கூந்தல்’ என்றார். இதனால், இவள் தலையிற் சிறிதளவு வெளுப்பும் உண்டென அறிய வைத்தார். இவ்வாறு கவிஞர்கள் காலத்துக்குக் காலம் உவமைகளைப் பொருள் ஒத்த வேறு சொற்களி னாலும், அடை கொடுத்தாளும் வகையினாலும், மாற்றி மாற்றி உயிரோடு உலாவ வைத்திருந்தனர் என்பது அறியப்படும். இக்காரணத்தால்தான், சொல்லும் பொருளும் போல, பருந்தும் நிழலும் போல, மலரும் மணமும் போல, நகமும் சதையும் போலஎன்ற உவமைகள் ஒரே பொருளன வாய் எழுந்தன. மலரும் மணமும் போல’ என்பதற்கு அடைகொடுத்து வண்ணப் பூவும் மண்மும் போல எனக் கவிஞர் பாரதிதாசன் பாடினார். காமனும் (அவன் தம்பி) சாமனும் போல, மாமனும் மருகனும் போல எனத் திருத் தக்க தேவர் சிந்தாமணியில் கூறினார். இம்மரபுகளைக் கடந்து இக்காலத்திற் கவி இயற்றுகின்ற சிலர், கோழி யடி நானுனக்கு, குஞ்சியடி நீபெனக்கு” என்றும், கோழியடி நானுனக்கு, கொல்லைப்புனம் நீ யெனக்கு’ என்றும் பாடுவதன் அடிப்படை 'மலரும் மணமும் போல’ என்பதாகும். உவமைகள், சொற்கள் முதலானவற்றின் மரபு களை விட்டுவிட்டு, க ரு த் தி ல் வரும் மரபினைக் காண்போம். ஆண்தான் பெண்ணிடத்திற் காதலை முதன் முதல் வெளிப்படக் கூறுவது என்பது ஒரு வழக்கு. இந்த வழக்கினைச் சூர்ப்பணகையைப் பொறுத்து மாற்றினார் கம்பர். கடலன்ன காமம் உழந்தாலும் தம் காமத்தை வெளிப்படுத்துவது பெண்டிர் மரபன்று என்பது,