பக்கம்:முன் பனிக் காலம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மரபும் இலக்கிய வளர்ச்சியும் கேடலன்ன காமம் உழக்தும் மடலேறாப் பெண்ணின் பெருத்தக்க தில்: என்ற திருக்குறளால் புலப்படும். ஆனால், சூர்ப்பணகை போன்ற அரக்கியரிடத்து இம்மரபு செல்லாது என்று கம்பர் கருதியதாற்போலும் அவள் இராமனிடம் தன் காதலைத் தானே வெளியிட்டதாக வரைந்தார். "தாமுறு காமத் தன்மை தாங்களே உரைப்ப தென்பது: ஆமென லாவ தன்றால் அருங்குல மகளிர்க் கம்மா t ஏமுறும் உயிர்க்கு நோவேன்! என்செய்கேன் யாரும் இல்லேன் காமன்என் றொருவன் செய்யும் வன்மைய்ைக் காத்தி. என்றாள்: என்பது அப்பாட்டு. இப்படிக் கூறுகிற இடத்திலும் பெண் ம்ரபுக்கு மாறுபட்ச் 'சூர்ப்பண்கை பேசின்ாலும், செர்ல்லுகிற சொல்லின்கண்ணே அவள் பெண்மை க்ாணிப்படுகின்றது எனக் காட்டுவார் போன்று கம்பீர், "தாமுறு காமத்தன்மை தாங்களே, உரைப் ஆமென:லாவ் தன்ற்ால் அருங்குல மகளிர்க் தென்பது ரின் என நீட்டி வளர்த்தி உரைத்துளார்."நல்ல பூெண்கள் காமத்தை தாமே உரையார்’ என்பதுதானே கருத்து? அதைச் சொல்லக் காமம் என வேண்டிய இடத்தில் காமத்தன்மை'என்றும் தாங்ளேஉரையார், எனவேண்டிய இடத்தில், தாங்களே உரைப்பதென்பது ஆமெனலாவ தன்றால்’ என்றும் நீட்டி வளர்த்தியிருப்பதிலேயே இம்மரபு பேணப்படாது பேணப்பட்டிருக்கிறது. அருங்குல மகளிர்க்கு ஒவ்வாததைச் சொல்லுகிறேனே, இஃதென்ன விந்தை” என்பாள் போலச் சூர்ப்பனகை அருங்குல மகளிர்க்கு அம்மா’ எனக் கூறினதாகவே கம்பர் காட்டினார்.