பக்கம்:முன் பனிக் காலம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபும் இலக்கிய வளர்ச்சியும் 89. ஆடவர்ைப் புகழ்ந்து கூறும் பாக்களில் ஆண்பால் எழுத்தாகிய குற்றெழுத்திலே முதற்சீர் தொடங்க வேண்டும் என்றும், பெண்டிரைப் பாடும். போது பெண் எழுத்தாகிய நெட்டெழுத்து முதலில் வரவேண்டுமென்றும் ஒரு வழக்கு தமிழகத்தில் இடைக்காலத்தில் கி.பி. 6 அல்லது 7-ஆம் நூற்றாண் டிற்குப் பிறகு தோன்றிற்று. அதனைப் பலர் சில நூற்றாண்டுகள் கையாண்டனர். ஆனால், அஃது இப் போது மங்கிப் போய்விட்டது. உதாரணமாக, கவி மணி தேசிக விநாயகம் பிள்ளையாடியுள்ள கம்பரைப் பற்றியுள்ள பாட்டு. ஆரியம் நன்குணர்ந்தோன்? என்றவாறு தொடங்கக் காண்கிறோம். ஆ’ ஆகிய நெட்டெழுத்து பெண்ணுக்கு அன்றோ உரியது இடைக்கால மரபுக்கு எற்ப் ! அன்பின் வெற்றி” என்ற தலைப்பில் மீராபாய் என்னும் பெண்ணின் புகழினைக் கவிமணி பாடியுள்ளார். அங்கு, பெண் ணெழுத்தாகிய நெடிலையன்றோ மர்புக்கு ஏற்ப எதிர் பார்ப்போம்? ஆனால், அவர் அன்னைப்ே தாயே!” எனக் குற்றெழுத்தால் தொடங்கியிருக்கக் காண்கின் றோம். “பரிதிமாற்கலைஞர்” என்ற வி. கோ. சூரிய நாராயண சாஸ் தி ரி யார் திருவள்ளுவரைப்பற்றிப் பாடிய பாட்டிலே "தாழ்.குலத் துதித்த" என நெடி லிலேயே தொடங்கின்ார். அன்றியும், முன்னையோர் யாத்து வழிகாட்டாத ஒரு புது வகையில் அவர் தனிப் பாசுரங்கள் பாடினார். ஆங்கிலத்தில் சானட்ஸ் (Sonnets) என்று சொல்லப் படும் பாடல்கள் பதினான்கு அடிகளால் இயலுவன. அம்மாதிரியே கடவுள் முதல் எறும்பு வரை உள்ள