பக்கம்:முன் பனிக் காலம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபும் இலக்கிய வளர்ச்சியும் 91 பற்றியும் பாடுதற்குப் பரிபாடல்கள் ஆளப்பட்டன. அதனால்தான் கடைச்சங்க காலத்துப் பரிபாடல் களாகக் கிடைத்துள்ள இருபத்திரண்டில், முருக வேளைப்பற்றியும், திருமாலைப்பற்றியும், வையையைப் பற்றியும் பாடியுள்ள பாடல்களைக் காண்கின்றோம். அப்பொழுதே இலக்கிய மரபினின்று புல்வர்கள் பெயர்ந்துவிட்டனர். - - - இன்ன வகுப்பினருக்கு இன்ன் பா உரியது என்ற மரபு சங்ககாலத்தில் இல்லை: இடைக்காலத்தில் தோன் றியதும்; சில. நூற்றாண்டுகள் பாதுகாக்கப்பட்டது. அம்மரபு இப்பொழுது பெரும்பாலும் பேணப்படுவதில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இன்ன வகுப் பாரை இன்ன பாவினால் பாட வேண்டுமென்பதற்கு விதியில்லை என்பது பழைய தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்தில், ஆது போன்ற,விதியில்லாம்ையால் அறியப்படும். கி.பி. ஏழு அல்லது ஏட்டாவது நூற்றாண் டிற்குப் பிறகு சில பாட்டியல் நூல்களில் அந்தணரை வெண்பரவாலும்,அரசரைஆசிரியப்பாவாலும்,லுணிகரைக் கலிப்பாவாலும், வேளாளரை வஞ்சிப்பாவாலும் பாட

  • ...:

வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டன. இந்த் மரபு சங்ககாலத்தில் இருந்ததாயின், பார்ப்பான், கவுணி யன் விண்ணந்தாய்ன்” என்பான் வ்ெண்ப்ாவினால் பாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவனைக் குறித்துப் பாடிய ஆவூர் மூலங்கிழார் புற்ம் (166) வஞ்சியடி கலந்துவந்த ஆசிரியத்தாற் பாடியுள்ளர். - சோழன் செங்கணான் அரசன். அவனை ஆசிரி யத்தாற் பாடுதலே முறையெனப் பாட்டியல் நூல்கள் குறிக்கும். ஆனால் அவனைப் பாடிய சங்ககாலத்துப்