பக்கம்:முன் பனிக் காலம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S2 மரபும் இலக்கிய வளர்ச்சியும் பொய்கையார் வெண்பாவிலே பாடிக் களவழி நாற்பது என அவ்வெண்பாக்களால் ஆன நூலுக்குப் பெயர் கொடுத்தார். மரபுக்கு ஏற்ப அரசர்கள் ஆசிரி யத்தால் அன்றோ பாடப்பட்டிருத்தல் வேண்டும்? ஆனால், சோழ மன்னன் ஒருவனைப் பேய்மகள். இள வெயினியும், பாண்டிய மன்னன் ஒருவனைப் பேரெயின் முறுவலாரும் வஞ்சிப் பாக்களாற் பாடினர். அப் பாடல்கள் புறநானூற்றில் 4, 11, 239 என்னும் எண் னுடைய செய்யுள்களாக்க் காண்ப்படுகின்றன. வஞ்சிப்பாவோ வேளாளர்க்கு உரித்து என்ப்ர் பிற்காலத்தார். ஆனால், ஆப் என்னும்ேெவ்ளாளனை முடமோசியார் முதலிய செந்தமிழ்ப் புலவர்க்ள். ஆசிரி யத்தாற் பாடிய பாடல்கள் பல புறநானுற்றிற் காணப்படுகின்றன. - பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தான் வேளா ளன். இவன்ை நக்கீரர் வஞ்சியடி கலந்த் ஆசிரியத்த்ாற் பர்டியுள்ளார். விண்ணந்தாயன்' என்னும் அந்தண னும் இவ்வகைப் பாடலாலேயே பாடப்ப்ட்டிருக்கிற்ான் என்பது மேலே காட்டப்பட்டுள்ளது. அவ்வாறிருப் பவும், வெண்பா அந்தணர்க்குரியது, வஞ்சிப்பா வேளாளர்க்குரியது என்பன பழ்ங்காலந்த்ெர்ட்டு வ்ரும் மரபு எனக் கூறுதல் எவ்வாறு பொருந்தும்? வணிகர்க்குக் கலிப்பா உரியதெனின், பெருங் குடி வணிகர் மரபினனாகிய கோவலன் கதை கலிப்பா விலே அன்றோ சொல்லப்பட்டிருக்க வேண்டும்! ஆனால், அவனைப்பற்றிப் பேசும் சிலப்ய்திக்ாரம்- பல நிலைமண்டில ஆசிரியப் பாக்களால் அன்றோ இயன் றிருக்கிறது: