இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17
பாடற்ற மோனக் களிதேக்கி
- யாடப் பணிக்கின்றனன்
கூடற்ற புள்ளுறை மாமரு
- தாசலக் கொற்றவனே. (39)
தவம்நேர்ந் திலன்மறை தேர்ந்திலன்
- அஞ்சு தகைந்திலன்மேற்.
பவம்நெர் வதற்கு மருந்தே
- தெனஎண்ணிப் பார்க்கிலன்யான்
சிவம்நேர் பவன்முரு கன்மரு
- தாசலம் சேர்ந்துருகி
நவம்நேர் உணர்வு பெறுதலொன்
- றேஇன்று நாடினனே. (40)
நாடித் திரிந்து பலதலம்
- மேவி ன்றும்புனலில்
ஆடித் துளைந்து செபஞ்செய்து
- சான மதிலமர்ந்து
39. ஈட்டம் - சேர்ந்த பிழம்பு. பாடு, அற்ற - ஒலியற்ற. கூடற்ற புள்-இயற்கையாகப் பறக்கும் பறவைகள்.
40. நேர்ந்திலன் - செய்யவில்லை. அஞ்சு-ஐம்பொறிகள். தகைந்திலன்-யான் தடுக்கவில்லை. பவம் கேர்வதற்கு-பிற்வியை எதிர்வதற்கு. நேர்பவன்-ஒப்பவன். நவம்கேர்-புதுமையையுடைய.