பக்கம்:முருகன் அருள்மணி மாலை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியன் முன்னுரை

குமரப் பெருமான் குன்று தோராடும் குழந்தைக் கடவுள் என்பதை யாவரும் அறிவர். என்றும் இளமையுடையவளுக வும் அழகே வடிவங் கொண்டவளுகவும் அவன் விளங்குகின் ருன். 'என்றும் இளையாய் அழகியாய்' என்று நக்கீர தேவர் முருகனைப் போற்றுகிருர். மேலும் அவன் கலியுகவரதளுக அடியவகளுக்கு அருள் சுரக்கின்றன். -

கொள்ளிமலைச் சாரலில் உள்ள வேளுக் குறிச்சியிலே முருகன் வேடவேலளுகக் காட்சியளிக்கிருன்; அந்த அழகிய மூர்த்தி தன் இடது கையிலே ஒரு பறவையைப் பிடித்துக் கொண்டிருக்கிருன். ஐம்புலக் காட்டிலே திரிந்து எங்கோ சுற்றி அலையும் ஆன்மாவை அவன் தேடிப் பிடித்துக் கொள்கிருன். வள்ளியைத் தினைப்புனத்தில் தேடி அலைந்து பிடித்துக் கொண்டது போல-நம்மிடத்திலெல்லாம் அவனுக்கு அத்தனை கருணை. நாம் மட்டும் அவன் பிடியில் அந்தப் பறவையைப்போல அகப்பட்டுவிட்டால் பிறகு கவலை ஏது நம்மைக் கடைத்தேற்றும் பொறுப்பை அவன் ஏற்றுக் கொள்கிருன். இதைத்தான் "நாம் இறைவனை நோக்கி ஒரடி நடந்தால் அவன் நம்மை நோக்கி நூறடி வருகிருன்'என்று

கூறுவார்கள். -

இவ்வாறு இறைவனை நோக்கி நடக்கும் முயற்சியிலே எழுந்தவைதான் என்னுடைய கீர்த்தனைகள் எல்லாம். முத் தமிழால் வைதாரையும் வாழவைப்பவளுகிய எம்பெருமானை அவனுடைய அளவற்ற கருணையை நினைந்து பாடுகின்றேன். அந்தப் பறவைக்குக் கிடைத்த பாக்கியம் எனக்கும் அருள்க என்று பாடுகின்றேன் -

ஆளுல் நான் அவளிடத்திலே செய்கின்ற புக்தி சிறியது. கபிழையாத தொண்டர் சிறிதே செய் அன்பு பெரிதாக நெஞ்சம் மகிழ்வார்' என்று திருச் செந்திற் கலம்பகத்திலே சுவாமிநாத தேசிகர் பாடுகின்ருர். இதை உள்ளத்திற்