பக்கம்:முருகன் காட்சி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சியப்பர் காட்டும் முருகன் 99

செறிந்துள்ளது; பக்திப் பெருக்கு நிறைந்துள்ளது. - அப்பாடல் வருமாறு: - --

அருவமும் உருவும் ஆகி

அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய் பிரமமாய் கின்ற சோதிப்

பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்கள் ஆறும்

கரங்கள்பன் னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்தாங்கு

உதித்தனன் உலகம் உய்ய.

-கந்த புராணம்: உற்பத்தி காண்டம்: 92

மறைகளாலும், அவற்றின் முடிவாலும் வாக்காலும் மனத்தாலும் அளக்க முடியாமல் யாண்டுமாய், எங்கு மாய், எல்லாமாய் நிறைந்திலங்கும் நிமல மூர்த்தி அறுமுக வுருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந்தருளி னான்’ என்று கச்சியப்பர் காட்டுவர். இவ்வாறு பிறந்த குழந்தைக்குக் கந்தன்’ என்று பெயர் இடப்பட்டது. ஒமெனப்படும் ஒரெழுத் துண்மையை உணராத பிரமனைக் குட்டிச் சிறையிட்டுப் படைப்புத் தொழிலைத் தானே மேற்கொண்டான் முருகன். விதி முதல் உரைக்குஞ் செயலினுக் கெல்லாம் ஆதியாய் அவதரித்த செவ்வேளுக்கு அயன் தொழில் ஒன்றும் அற்புதம் இல்லை எனும்படி, :பல்லுயிர்த் தொகை படைப்பதனைப் பரிவால் நினைந்தனன். தந்தைக்குப் பிரணவத்தின் பொருளை உபதேசித்துச் சாமிநாதன்’, குருசாமி என்ற பெயர் பெற்றான் முருகன்.

தேவர்களுக்கு இன்னல் இழைத்த சூரபன்மனைத் தொலைக்கப் போர் வேடந் தாங்கித் துணைவருடன் அமர்க்களம் நண்ணிய அண்ணலைத் தன்னிரு விழியாற் கண்டான் தானவர்க் கிறைவன். சூரனெனும் அவுனர் கோமான் தொல்லை நாள் நோற்றிருத்தல் வேண்டும்.