பக்கம்:முருகன் காட்சி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சியப்பர் காட்டும் முருகன் 1 0 1

அமரர் சிறை மீட்டுத் துயர் களைந்த குமரேசனுக்கு அமரேசன் தான் வளர்த்த தெய்வயானையைத் திருப்பரங் குன்றத்திலே சிறப்புடன் மணம் செய்து கொடுத்தான். யாவரும் மகிழ்ந்திட மன்றல் இனிதே நடந்தது.

கற்பால் விண்ணுலக மடந்தை தெய்வ யானையைக் கொண்ட முருகன் களவால் வள்ளிமலைச் சாரலில் பிறந்து வளர்ந்து வரும் வள்ளியைச் சென்று வேலவன் வடிவிலே காணுகின்றான்.

தினைப்புனத்தைக் காவல் காக்கும் வள்ளியின் வனப்பில் மனத்தைப் பறிகொடுத்த மால்மருகன் முருகன் வள்ளியிடம் தன் காதல் நிறைவேற எளிவந்து இரக் கின்றான். ஒரு பேச்சுப் பேசு’ என்கின்றான். இன்றேல் ஒரு புன்னகை வேண்டும் என்கின்றான். அதுவும் இன்றேல் சற்றுக் கடைக்கண்ணாவது காட்டவேண்டும் என்று கேட் கின்றான். அதுவும் அருளவில்லை என்றால் அவனுடைய காதல் கனல்விட்டு எரியும் என்றும், எனவே பிழைத்துப் போகும் வழியையாவது மனம் வைத்துக் காட்டவேண்டும் என்றும், அல்லது மனமாவது சிறிது தன்பால் நெகிழ வேண்டும் என்றும், இவற்றுள் ஒன்றேனும் நிகழாவிடில் பழியை வள்ளிபால் வைத்து இறந்துபடுவேன் என்றும் கூறி, முருகன் வள்ளி பாரா முகமாய்த் தன்பாலிருக்கக் கூடாது என்றும் குறிப்பிடுகின்றான்.

மொழியொன்று புகலா யாயின்

முறுவலும் புரியா யாயின் விழியொன்று நோக்கா யாயின்

விரகமிக் குழல்வேன் உய்யும் வழியொன்று காட்டா யாயின்

மனமுஞ்சற் றுருகா யாயின் பழியொன்று நின்பாற் சூழும்

பராமுகங் தவிர்தி யென்றான்.

- கந்தபுராணம் : வள்ளியம்மை : 72