பக்கம்:முருகன் காட்சி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 முருகன் காட்சி

இக்காலத்து வைத்திசுவரன் கோயில் அந்நாளில் புள்ளி ருக்கும் வேளுர் என வழங்கியது. மேலும் ஆதிவைத்திய நாதபுரி, கந்தபுரி, குருகூர், சடாயுபுரி, தினகரபுரி, பருதிபுரி, புள்ளுர், வேதபுரி, வேளுர் எனப் பல திருப்பெயர்களும் இத்தலத்திற்கு வழங்கும் என்பது இவர் பாடலால் பெறப் படும். இத்தலத்துறை முருகக் கடவுள் தீராத வினை தீர்த்தருளும் தம்பிரானாக விளங்குகிறார். கடவுள் முத்துக்குமரர் என்றும் சேனாபதி என்றும் வழங்கப்படு கின்றார். இம் முருகப் பெருமான் மீது குமரகுருபரர் பாடிய பிள்ளைத் தமிழே முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழாகும்.

இப் பிள்ளைத் தமிழில் செங்கீரைப் பருவத்தில் முருகன் வள்ளியம்மையிடம் கொண்ட காதலைக் குமர குருபரர் நயம்படப் பின்வருமாறு கிளத்துகின்றார்:

கூனேறு மதிநுதற் றெய்வக் குறப்பெண்

குறிப்பறிங் தருகணைந்துன் குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக்

குறையிரங் தவடொண்டைவாய்த் தேனுாறு கிளவிக்கு வாயூறி கின்றவன்

செங்கீரை யாடியருளே செத்துப் பிறக்கின்ற தெங்வங்கண் மணவாள

செங்கீரை யாடியருளே.

-முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் : 2:5

பிறிதோரிடத்தில் முருகனைக் கூறும்பொழுது அழகு கனிந்து முதிர்ந்த விளங்கனி’ எனப் புகழ்கின்றார். மேலும் அருள்பொழி திருமுக மசைய வசைந்தினிதாடுக செங்கீரை என்று முருகனின் கருணைப் பெருக்கினைக் குறிப்பிடு கின்றார்.

தாலப் பருவத்தில் மலையாள் வயிறு வாய்த்த முழு மணியே தாலோ தாலேலோ” என்று முருகன் பிறந்த