பக்கம்:முருகன் காட்சி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14. முருகன் காட்சி

இழுமெ னருவி சொரியு மிமய முதல்வி

புதல்வன் வருகவே இயலு நடையும் வடிவு மழகு மெழுத

வரியன் வருகவே. -முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் : 6 !

அம்புலிப் பருவத்தில் முருகனே கண்கண்ட கடவுள் என்று சாதித்துப் பேசுகின்றார் புலவர் :

விழியாக முன்னின்று தண்ணளி சுரங்தவர்கள்

வேண்டிய வரங் கொடுப்பான் மெய்கண்ட தெய்வமித் தெய்வமல்லாற் புவியில்

வேறில்லை யென்றுணர்தி.

-முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் 7 : 6

குமரகுருபரர் சிற்றில் பருவப் பாடலில் சிறுசோறு வேண்டி விளையாடும் இடத்தில் சிற்றில் சிதையாமலிருக்க கோருகின்றார் :

பிள்ளை மதிச்செஞ் சடைச் செருகும்

பெருமானார்க்கு முலகேழும் பெற்ற தாய்க்கு கீயருமைப் -

பிள்ளை யெனினெம் பேராய வெள்ள மமைத்த சிறுசோறு

வேண்டி னிடுகே மலதெளியேம் விளையா டிடத்துச் சிறுகுறும்பு

விளைத்தாற் பொறுக்க விதியுண்டோ. -முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் : 8 : |

சிறுபறைப் பருவத்திலே முருகனை முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகனாகக் காண்கின்றார் குமரகுருபரர்.

இறுதிப் பருவமான சிறுதேர்ப் பருவத்தில் திரு முருகனைத் தீராத வினை தீர்த்த திருமுருகன் என்று கூறிப் பரவி வணங்குகின்றார், முருகன் அருள் பெற்ற அடிய வராம் குமரகுருபரர்.