பக்கம்:முருகன் காட்சி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

பதிகாரத்தின் மூன்றாவது காண்டமான வஞ்சிக் காண்டத் தின் முதற் காதையான ‘குன்றக் குரவை'யில் குமரப் பெருமானின் சிறப்புக்களாகக் குறித்திருக்கும் செய்தி

களைக் குறைவறக் கொண்டிலங்குவதாகும்.

கச்சியப்பர் ஒரு காவியக் கடல்; கந்த புராணத்தைத் தந்த செல்வர். கந்த புராணத்தில் திருமுருகனின் வரலாறு திறம்படப் பேசப்படுகின்றது. இப் புராணத்தில் கந்த வேளின் பிறப்பு வளர்ப்பு முருகன் சூரனை அழித்து அமரர் துயர் களைந்த அருட்செயல், அமரர்கோன் வளர்த்த அருஞ்செல்வி தேவானையைக் கற்பில் கொண்டு. வள்ளி மலையில் நம்பிராசன் என்னும் வேட்டுவ வேந்தனின் மகளாய் வளர்ந்த வள்ளியைக் களவிற் கொண்டு அடிய வர்க்கு அருளிய வரலாறு முதலியன விளங்க உரைக்கப் படுகின்றன.

பாமணக்கும் நாமணக்கும் திருப்புகழ்ப் பாடல்களைத் தந்த செல்வர், நினைக்கவே முத்தி தரும் தலமாம் திருவண்ணாமலையில் பிறந்த அருணகிரியார் ஆவர். அவர் தம் திருப்புகழ்ப் பாக்கள்வழிக்காட்டும் முருகன், பக்தியிற் கனிந்த பழமாவன். பல குன்றிலமர்ந்த பெருமாளை நெஞ்சாரத் துதித்து, வாயாரப் பாடிக் கலியுக வரதனாம் கந்தவேளை வந்தித்து வந்தவர் அருணகிரியார் என்பது இக் கட்டுரையால் புலனாகும்.

சிறுபிரபந்த வகைகளில் சிந்தையைக் கவர்கின்ற இலக்கிய வகை, பிள்ளைத் தமிழாகும்! பிள்ளைத் தமிழ் எனும் பெரிய தமிழைப் பதினேழாம் நூற்றாண்டில் சிறக்கப் பாடியவர் குமரகுருபரர் ஆவர். அவர் புள்ளிருக்கு வேளுர் முருகன் மீது பாடிய பிள்ளைத் தமிழ் முத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ் ஆகும். இப் பிள்ளைத் தமிழில் காணலாகும் முருகன் காட்சியே எட்டாவது கட்டுரையாக இலங்கும் குமர குருபரர் காட்டும் முருகன்’ எனும் கட்டுரையாகும்.

ஒன்பதாவது கட்டுரை வள்ளலார் காட்டும் முருகன்’ என்பதாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து சமரச சுத்த் சன்மார்க்கம் கண்டவர் வள்ளலார் ஆவர்.

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களான பாரதி கவிமணி முதலான கவிஞர்களும் முருகன் காட்சியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/12&oldid=585862" இலிருந்து மீள்விக்கப்பட்டது