பக்கம்:முருகன் காட்சி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர்கள் காட்டும் முருகன் 125

என்னுளத் திருந்த பந்தம்

ஏதுமற்றுப் போனதே.

என்று முருகன் செயல் கூறும் கவிஞர், முருகன் அஞ்சேல்’ என்று தமக்கு அளித்த அபயத்தால் துன்பம் நீங்கிச் சுகம் வந்ததாகக் குறிப்பிடுகின்றார்:

அன்பனந்த முருகன்வந்

தழைத்திருத்தி என்னையே அஞ்சல் அஞ்சல் அஞ்சலென்

றகங்குழைந்து சொன்னதால் துன்பமிக்க அடிமைவாழ்வில்

தோய்ந்திருந்த என்மனம் சோகம்விட்டு விடுதலைக்கு

மோகமுற்றி விட்டதே.

-தமிழன் இதயம்: முருகன் பாட்டு.

முருகன்மேற் காதல்’ என்ற இசைப்பாடலில், முருகன் என்ற பெயர் சொன்னால் உள்ளம் உருகுவதாகவும், கந்தனென்று பெயர் சொன்னால் சிந்தை துள்ளுவ தாகவும், வேலனென்று பெயர் சொன்னால் வேர்வை கொட்டுவதாகவும், குமரனென்ற சத்தத்தால் சித்தம் குளிர்வதாகவும், குகன் என்று சொல்வதற்குள் அகம் மறந்ததாகவும் கவிஞர் குறிப்பிடுகின்றார்.

ஆடும் மயிலில் வரக்கண்டேன்-சொல்ல அழகு அதைவிட ஒன்றுண்டோ வீடு வாசல் பொருள் எல்லாம்-துச்சம் விட்டு மறந்த னடிநல்லாள்.

என்று முருகன் மயில் மீதமர்ந்து உலா வரும் உவப்பர்ன் காட்சியினைக் கண்ட கவிஞர் வீடு வாசல் பொருள் எல்லாம் துச்சம் எனத் துறந்து முருகன் காட்சியில் ஒன்று பட்ட நிலையினைக் கவினுறக் காட்டியுள்ளார்.

மு.8