பக்கம்:முருகன் காட்சி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 முருகன் காட்சி

அழகான மேனி தாங்கிய வேளே என்றும், முதுமலை அழக குருநாதா என்றும், *மணிமுதிராடக வெயில் வீசிய அழகர் தமிழ் பெருமாளே என்றும், அயிலு மயிலு மறமு நிறமு மழகு முடைய பெருமாளே.” என்றும் திருப்புகழில் அணிருகிரியார் பலவாறு முருகனை அழகன் என்று போற்றிப் பரவுகின்றார். குன்று தோறும் உறைவதால் முருகனைக் குன்று தோறும் “ஆடிவரும் குமரவடிவேலன் என்பர்.’ குன்றுதோ றாடல்மேவு பெருமாளே என்று திருப்புகழ் முருகனைக் குறிப்பிடு கின்றது. கார்த்திகைப் பெண்டிர் அறுவரும் எடுத்து வளர்த்தமையால் ஆறு குழந்தையாக விளங்கிய முருகன் உமை ஒன்றாகச் சேர்த்துத் தழுவ ஆறு. முகமும் பன்னிரு கையும் கொண்ட ஒரு i- திருவுருவானான். எனவே முகுகனுக்குக் கந்தன் என்ற பெயரும் உண்டு. நெருப்புக் கடவுள் தன் கையில் முருகனை ஏந்தியதால் அக்கினியூ என்ற பெயரும், கங்கையில் வளர்ந்த காரணத்தால் கோங்கேயன்’ என்ற பெயரும், சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணன்’ என்ற பெயரும், கார்த்தி கைப் பெண் க ள் ஒராறு பேரும் கண்டுகளித்திட வளர்ந்தவன் ஆனதால் கா ர் த் தி ேக ய என்’ என்ற பெயரும், கடப்ப மரநிழலில் துயின்றதால் கடம்பன் என்ற பெயரும், ஆறுமுகம் கொண்டமையின் ஆறுமுகன் என்ற பெயரும், அழகும் இளமையும் கொண்டு திகழ்வதால் அழகன், குமரன் என்ற பெயர்களும், அடியார்களின் உள்ளமெனும் கோயிலில் உறைகின்ற காரணத்தால் ‘குகன்’ என்ற பெயரும், விசாக நாளுக்கு உரியவனாகத் தோன்றியதால்: :* விசாகன்’ என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. பிரணவத்தின் பொருளை உணர்த்த வேண்டிச் சிவனுக்கு உபதேசித்ததால் தகப்பன் சாமி, குருமூர்த்தி. சாமிநாதன் என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. |