பக்கம்:முருகன் காட்சி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 முருகன் கர்ட்சி

மெய்கண்ட தெய்வமித் தெய்வமல் லாற்புவியில்

-முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் : 7 : 6

என்று முருகனே முழுமுதற் பொருள் என்று மனமாரப் பாராட்டி வணங்குகின்றார்.

முருகனுக்குரிய விரதங்கள் வெள்ளிக்கிழமை, கார்த் திகை, சஷ்டி முதலியனவாகும். கச்சியப்பர், அருணகிரி யார், குமரகுருபரர் முதலிய புலவர் பெருமக்களை ஆட் கொண்ட அ ண் ண ல் அவர். குமாராய நம, “சரவணபவ” என்ற ஆறெழுத்து-சடாட்சரம் முருகப் பெருமானுக்கு உரிய மந்திரமாகும். எனவே: தமிழ்த் தெய்வமாம் முருகன் திருப்பெயரினை உளம் உருகி ஒதுவோரை நாளும் கோளும் ஒன்றும் செய்யா. அஞ்சுமுகந் தோன்றினால் முருகனின் ஆறு மு க ந் தோன்றும். நெஞ்சில் ஒருமுறை எண்ணினால் இருமுறை தோன்றி அஞ்சாதே” என்று கூறி, தெய்வ இளநலம் காட்டி அடியவர்க்கு அருள் பொழிவான் திரு முருகன்

என்பது திண்ணம். - ‘ ‘ “. . . . ‘. . . . . . ;