பக்கம்:முருகன் காட்சி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் காட்டும் முருகன் 3 *

தலைவனான தெய்வமாம் முருகன் பெயரைச் சார்ந்து வழங்கப்படுகின்றது. இதனை நச்சினார்க்கினியர் தம் உரையில் கந்தழியைப் பெற்றா னொருவன் அதனைப் பெறாதா னொருவனுக்குப் பெறுமாறு கூறி அவனை வழிப் படுத்துக் கூறுவானென்பதுபற்றிச் செய்யுள் செய்தா ராயிற்று” என்று கூறியுள்ளார். மேலும் அவர், கந்தழி யாவது ஒரு பற்றுமற்று அருவாய்த் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள்’ என்று கூறிப் பின்னும் கந்தழியை விளக்கப் புகுவான் எடுத்துக் கொண்டு அது,

சார்பினாற் றோன் றாது தானருவா யெப்பொருட்கும், சார்பெனகின் றெஞ்ஞான்று மின்பங் தகைத்தரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த தூய்மையதா மைதீர் சுடர் என்றும்,

உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல் பற்ற லாவதோர் நிலையிலாப்

பரம் பொருள். -திருவாசகம்: அதிசயப்பத்து; 9 என்றும் கூறுகின்றார். இறுதியாக ‘முருகாற்றுப்படை யென்றதற்கு வீடுபெறுதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்த தென்று பொருள் கூறுக’ என்று கூறித் தம் உரையை

முடிக்கின்றார் நச்சினார்க்கினியர். கைபுனைந்தியற்றாக் கவின் பெறு வனப்பு

உலகுக்கு உயிரூட்டி நிற்கும் இயற்கைச் சக்திகள் பல உலகில் வாழும் உயிர்கள் மகிழ்ச்சியடையும்படி அவ்வுயிரினங்களுக்கு வலிவும் பொலிவுந் தந்து உலகெங்கும் ஒளியூட்டி நிற்கின்றான் பலர்புகழ் ஞாயிறு. இந்த வாயிற்றைப் பாடாத கவிஞர் இலர்; போற்றாத அறிஞர் பெருமக்கள் இலர். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் வந்த இளங்கோவடிகளும், காப்பியத்தின் முதற் காதையாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/33&oldid=585914" இலிருந்து மீள்விக்கப்பட்டது