பக்கம்:முருகன் காட்சி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் காட்டும் முருகன் 35

பல்காசு கிரைத்த சில்கா ழல்குல் கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச் சேணி கந்து விளங்குஞ் செயிர் தீர் மேனி.

-திரு முருகு: 12-18 பெருந்தண் கண்ணி மி ைலந்த சென்னியன்

மகளிர்க்கு ஆடவரைக் காட்டிலும் அழகில் நாட்ட முண்டு. தங்களைப் புனைந்து கொள்வதில் வேட்கை மிகுதி. கருங்கூந்தல் நிறைய மணம் பரப்பும் மலர் சூடித் தங்களை ஆப்பனை செய்துகொள்வதில் மாறா விருப்பம் அவர்கட்கு _ண்டு. எழிலும் மென்மையும் வனப்பும் வாய்ந்த வண்ண மலர்கள் தங்கள் கூந்தலை அழகு செய்யவேண்டும் என்ற

அழகுணர்ச்சி அவர்கள் பால் இயற்கையாகவே உண்டு.

சூரரமகளிர் மூங்கில்கள் வானோங்கி வளரும் உயர்ந்த மலையில் ஒன்று கூடுகின்றனர். அவர்களின் கைபுனைந் வியற்றாக் கவின்பெறு வனப்பு’க் காண்போர் தம் கண் களுக்கு விருந்தாகிக் கருத்தைக் கொள்ளை கொள்ளு கின்றன. அவர்கள் தம்மில் ஒத்த தன்மையராய் ஒன்றுகூடி ஆடிப்பாடி மகிழ்கின்றனர். தங்களுக்குத் தாங்களே சிக்கெடுத்து விரித்து, கடை இணையொத்து இழுத்து wழுத்திப் பின்னிய கூந்தலை உடையராய்த் தோற்றமளி வின்றனர். செக்கச் சிவந்த காம்பினையுடைய வெட்சி மலரின் சிறிய பூக்களைத் தங்களின் கூந்தலின் இடை பிடையே விடுபூவாக இட்டுள்ளனர். மேலும் அவ்வெட்சி மலர்களின் இடையிலே பசிய தண்டினையுடைய குவளைப் டிவின் து.ாய்மையான இதழ்களைச் செறித்துள்ளனர். தெய்வத் தன்மை பொருந்திய சீதேவி என்னுத் தலைக் கோலத்துடனே வலம்புரிச் சங்கின் வடிவிற்றாகச் செய்யப் பெற்றதொரு தலைக் கோலத்தினையும் ஒரு சோத் தொகுத்துத் தங்கள் தலையினை ஒப்பனை செய்துள்ளனர். பொட்டிடப் பெற்று நறுமணங் கமழும் அழகிய நெற்றியிலே சுறாமீன் வடிவில்செய்யப் பெற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/37&oldid=585918" இலிருந்து மீள்விக்கப்பட்டது