பக்கம்:முருகன் காட்சி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் காட்டும் முருகன் 39.

மண்ணாகிய பூதத்தினும் நீராகிய உயிர்ப்பொருள் காலத் தால் முந்தியது என்பது தெளிவாகின்றது.

இவ்வாறு பாறை நிலம் முதிர்வு பெற்ற குளிர்ந்த கடல் கன் நிலை குலையும்படி உட்சென்று சூரபன்மனை ஒளி விடுந் தன் சுடர் வேலாலே கொன்றவன் முருகன். இதனைப் பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு என்று பரிபாடலும் பாயிரும் பனிக்கடல் உள்புக்குப் பண்டொரு நாள் சூர்மா தடிந்த கடரிலைய வெள்வேலே’ என்று சிலப்பதிகாரமும் பேசுகின்றன. மேலும், வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேய்’ என்று பெரும் பாணாற்றுப்படையும், சூர்மருங் கறுத்த சுஉரிலை நெடு வேன்’ என்று அகநானூறும் பிற்காலத்தே நாம் கந்த புராணத்தில் காணும் புராணச் செய்தியினைக் கிளத்திக் கூறியுள்ளன.

இனி நக்கீரர் பெருமான் பேய்மகள் துணங்கைக் கூத்து ஆடிய செய்தியினை இழிப்புச் சுவை தோன்ற வருணித்துச் செல்கின்றார். .ே ப ய் ம க ள் எண்ணெய் தேய்த்துக் கொள்ளாமல் காய்ந்துபோன மயிரினையும், ஒன்றுக் கோன்று வரிசையில் பொருந்தாத பிறழ்ந்த பற்களையும், சுழலுகின்ற கருவிழியினையுடைய பசிய கண்களையும், கண்டாரை அச்சத்தாற் கொல்லும் கொடிய பார்வை யினையும் உடையளாயிருக்கின்றாள். அவளின் செவித் துணை வங்கு போன்றிருத்தலினால் கூகைகள் ஆண்டு வந்து தங்கி உறைகின்றன. கொடிய பாம்புகள் அவளின் காதணி களாகத் தொங்கி அவள் தன் பெரிய கொங்கைகளைத் தாக்கி வருத்துகின்றன. அவள் வயிற்றிடம் சருச்சரையை யுடையதாயுள்ளது. அவளின் விரைந்த கொடிய நடை அச்சத்தைத் தோற்றுவிக்கின்றது. அவள் குருதி தோய்ந்த கூர்மையான நகத்தையுடைய கொடிய விரல்களால், போர்க்களத்திலே தான் கண்களைத் தோண்டி விழுங்கிய புலால் நாற்றம் மிகுந்து வீசும் பெரிய தலையைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/41&oldid=585923" இலிருந்து மீள்விக்கப்பட்டது