பக்கம்:முருகன் காட்சி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் காட்டும் முருகன் 4. 1”

பல்லோ முத்தோ என்னா திரங்காது

கண்டொட் டுண்டு கவையடி பெயர்த்துத்

தண்டாக் களிப்பின் ஆடுங் கூத்து.

-ம ணி : 6 : 120-162

இதன் பின்னர், செவ்வேற் சேயாம் முருகனின் நல்ல வெற்றியினைப் புகழ்ந்து பேசுகின்றார் புலவர். மக்கள் வடிவுடனும் விலங்கு வடிவுடனும் ஆக இரண்டு பெரிய வடிவுடைய சூரபதுமனின் உடலம் வேறு வேறாக அற்று விழும்படி முருகன் தன்னுடைய கூரிய இலைத் தொழிலமைந்த நெடுவேலாலே பிளந்தான். அசுரனோ கீழ்நோக்கித் தொங்கும் பூங்கொத்துக்களையுடைய மாமர மாக மாறினான். அவன் நல்ல வெற்றி அடங்க மாவினை வேரோடு சாய்த்துப் பிளந்தான் முருகன். ஒரு கூறு சேவ லாகவும், மறு கூறு மயிலாகவும் ஆயிற்று. இத்தகு. வெற்றியினைப் புகழ்ந்து பாடிப் பேய்மகள் துணங்கைக் கூத்து ஆடுகின்றாள்.

நக்கீரர் பெருமான் திருமுருகனிடம் நம்மை ஆற்றுப். படுத்துகின்றார். முருகப் பெருமானின் சிவந்த திருவடி களைத் தேடிச்செல்லும் தலைமை சான்ற உள்ளத்துடனே தன்மையையே நாடிச் செல்லும் குறிக்கோளுடனே முருகன் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடத்திற்குச் செல்லுதலை நீ விரும்பினாயேயானால் முன்னர் எடுத்த பல பிறவிகளிலும் தேடிய நல்ல மனத்திலுள்ள விருப்பமானது இனிதே நிறைவேறும்படி நீ எண்ணிய செயலின் பயனை இப்பொழுதே பெறுவாய்’ என்று சேவடி படரும் செம்மல்

ள்ளம் முன்னிய வினையினை இன்னே பெறுதலைக். 1. லுகின்றார் நக்கீரர் .

S S S T T TS TS T S TS T S TS TS T S TS T S TS TS TS TS TS TS TS TS T S TS T S TS T S S S கவிழினர் மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/43&oldid=585925" இலிருந்து மீள்விக்கப்பட்டது