பக்கம்:முருகன் காட்சி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 முருகன் காட்சி

ஏதமில் சூழவி போல்வான்

யாவையு முணர்ந்தான் சீரும் போதமும் அழிவில் வீடும்

பேற்றினர்க் கருள வல்லான்.

-கந்தபுராணம் : திருவிளை , 19

எனவே திருமுருகன் சேவடி படரும் செம்மல் உள்ள மொடு செலவு நயந்தால் முன்னிய வினையை இன்னே பெறலாம் என்கிறார் நக்கீரர் பெருமான்.

பொருநர்த் தேய்த்த போரரு வாயில்

திருமுருகன் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் இடங்களை ஒவ்வொன்றாகக் கூறப்புகுந்த நக்கீரர் பெரு மான் முதற்கண் திருப்பரங்குன்றத்தினைப் புகழ்ந்து கூறு கின்றார். ஏதேனும் ஒர் ஊருக்கு வழிகாட்ட வேண்டு மானால் அந்த ஊருக்கு அண்மையிலுள்ள பெரிய ஊரினைச் சுட்டிக்காட்டி, அதற்கு அருகில் இந்தத் திசையில் இவ்வளவு துாரத்தில் அவ்வூர் இருக்கிறது என்று கூறுதல் உலக வழக்காகும். அவ்வாறே நக்கீரர் பெருமானும் தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரையின் பெருமையினை முதற் கண் பலபடப் பாராட்டிப் பேசு கின்றார்.

போரை விரும்பி-த ம் .ெ மா டு பொருவதற்குப் பகைவரை விரும்பி-சேணிலத்தும் சென்றுயர்ந்து நிற்கும் நீண்ட கொடிக்கு அருகில் நூலால் வரிந்து கட்டப்பட்ட பந்தும் பாவையும் அறுப்பாரின்மையான் தொங்கிக் கொண் டிருந்தன. போர் தொடுக்கும் பகைவர் யாவரையும் இல்லை யென்று தேய்த்து அடியோடு அழித்து விட்டமையின், தலை வாயிலில் பகைவர் புகுவதும் போரிடுவதும் அற்று வறிதாகப் போய்விட்டது.

செருப்புகன்று எடுத்த சேண் உயர் நெடுங்கொடி

வரிப்புனை பங்தொடு பாவை துரங்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/48&oldid=585930" இலிருந்து மீள்விக்கப்பட்டது