பக்கம்:முருகன் காட்சி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக்கீரர் காட்டும் முருகன் 61

ஒதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றலென்று ஆறுபுரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர்

-பதிற்றுப்பத்து, 24 : 6–8

என்று பதிற்றுப்பத்து, அந்தணர் தம் கடப்பாட்டினை வலுகின்றது. நாற்பத்தெட்டு ஆண்டுகள் நல்ல பிரமசரிய விரதம் காத்தவர்கள்; இளமை இன்பத்தை துய்க்காமல் பிய மசரிய நோன்பு இயற்றிய பேராண்மையாளராய், அயங்கூறும் கோட்பாடுடையவராய் முத்தி வேட்கின்றனர். புறநானுாற்றின் இரண்டாவது பாடலிலேயே ‘அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தி பேசப் படுகின்றது. ‘ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்தி என்று மேலும் புறப்பாடல் கூறுகின்றது. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ வடிகள் அந்தணர்தம் செயல்களைப் பின்வருமாறு கூறு கின்றார்:

ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஒம்பும் அறுதொழில் அந்தணர்.

-சிலப்பதிகாரம் : 23 : 67-70

பிரமசரிய விரதம் காப்பது மிகவும் அரிது. *சிந்தையை அடக்கிச் சும்மாயிருக்கும் நிலை அரிது என்பர். மனம் எலும் மாயக் குரங்கினை அடக்குவது அரிது என்பர் தத்துவ வாணிகள். இன்பம் முற்றிலும் துகரவேண்டிய-துய்க்க வேண்டிய இளமைப் பருவத்திலே மனத்தை அடக்கிப் பிய மசரிய விரதம் காப்பதென்பது அரிதினும் அரிய செயலாகும். இதனை உள்ளத்தில் கொண்டே இளங்கோ வடிகளும்,

மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு

இடங்கழி நெஞ்சத்து இளமை யானை மு.4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/63&oldid=585948" இலிருந்து மீள்விக்கப்பட்டது