பக்கம்:முருகன் காட்சி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 == முருகன் காட்சி

இவ்வாறு கள்ளுண்டு களித்துக் குறவர் குரவைக் கூத்து நிகழ்த்தும் செய்தியினைப் பிற சங்க நூல்களும் துவலா நிற்கின்றன. மலைபடு கடாத்துள்,

அருங்குறும்பு எறிந்த கானவர் உவகை திருந்துவேல் அண்ணற்கு விருந்திறை சான்மென நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரோடு மான் றோய் சிறுபறை கறங்கக் கல்லென வான்றோய் மீமிசை அயருங் குரவை

-மலைபடுகடாம்: 318-322.

என்று இக்குறவர்தம் குரவைக் கூத்துப் பேசப்படுகின்றது.

குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள் f வாங்கமைப் பழுகிய தேறன் மகிழ்ந்து வேங்கை முன்றிற் குரவை யயரும்

- -புறு நானுாறு : 129 : 1.3 என்று இதனையே புறநானூறு குறிப்பிடுகின்றது.

பின்னர்ப் பெண்கள் புனைந்துள்ள கோலத்தினைக் குறிப்பிடுகின்றார் நக்கீரர். தாமே மலராமல் விரல் அலைப்பாலே செயற்கையான முறையில் அலர்விக்கப் பெற்ற பூவாகலின் வேறுபடுகிற நறிய மணம் நிறைந்த வண்டுகள் மொய்க்கும் தலையிற் சூடும் குவளை மாலை யினையும், இதழ் பறித்துக் கட்டின மாலையினையும், சேர்த்த கூந்தலினையும், இலையைத் தலையிலே சூடிய கஞ்சங் குல்லையினையும், இலையையுடைய நறியபூங் கொத்துக்களையும் செவ்விய அடிமரத்தினைக் கொண்ட மராமரத்தின் வெள்ளிய கொத்துக்களின் நடுவே வைத்து, வண்டுகள் வந்து தங்கி ரீங்காரமிட்டுத் தேனையுண்ணும் படி தொடுக்கப் பெற்ற பெரிய குளிர்ந்த அழகு நிறைந்த தழையினையும் வடங்களையும் அணிந்து கொண்டே, இளமையும் சாயலும் ஒழுக்கமும் சான்ற மயில் போன்ற மகளிர் முருகப்பெருமானை முன்னுறச் சென்று வணங்கு கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/68&oldid=585953" இலிருந்து மீள்விக்கப்பட்டது