பக்கம்:முருகன் காட்சி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-74 - முருகன் காட்சி விரும்பி வந்தார்க்கு அதனைக் கைகூட்டி நுகர்விக்கும் புகழினையுடைய பேரருளாளனே! பிறரால் துன்பமுற்று வந்தோர்க்கு அருள் புரியும் பொற் பூண்களை அணிந்த ம்ார்பினையுடைய சேயோனே! மிக நெருங்கி வந்து எதிர் நின்று போர் செய்தவருடைய போரை வென்று முடித்த நின் மார்பிடத்தே, இரந்து வந்தோரைத் தழு வித் தாங்கிக் கொள்ளும், கண்டார்க்கு அச்சம் தரும் நெடிய வடிய வடிவத்தையுடைய வேளே! வானோரும் அந்தணரும் ஆகிய உயர்ந்தோரால் ஒதி ஏத்தப் பெறுகின்ற பெரிய மறைமொழியாகிய திருப்பெயரையுடைய இறைவனே! சூரபன்மாவின் குலத்தை இல்லையாகும்படி செய்த தோள் வலிமையுடைமையாலே எப்போரிலும் மிக்கு ஒப்பற்ற வனாய் விளங்குபவனே! தலைவனே! என்று இவ்வாறு பலவாக யான் அறிந்து உனக்குக் கூறிய அளவானே புகழ்ந்து அமையாது மேலும் மேலும் புகழ்ந்து, உன்னுடைய தன்மைகளையெல்லாம் அளவிட்டு அறிதல் நிலைபெற்ற உயிர்களுக்கு அருமையாதலின், உன்னுடைய திருவடியைக் காணவேண்டுமென்று நினைத்து வந்தேன். உன்னோடு ஒப்பார் இயலாத மெய்யுணர்வை உடையவனே! என்று கூறி, நீ கருதிய வீட்டுப் பேற்றினை விண்ணப்பம் செய் வதற்கு முன்பே, கருதியதை உணர்ந்துகொண்டு, அப் பொழுதே வேறு வேறாகிய பல வடிவினையுடைய இனிய பலராகிய பணியாளர், விழாவெடுத்த களத்தின் கண் பெருமை பெறத் தோன்றுதல்போல் தோன்றி, இந்த இரவலன் (யா சகன்) இரக்கம் காட்டி அருளுவதற்கு உரியவனே! பெருமானே! அறிவு முதிர்ந்த வாய்மையினை யுடைய இந்த இரவலன் உன்னுடைய வளவிய புகழினை விரும் பி வந்துளான். இனியனவும் உறுதி பயப்பனவும் ஆன மிகமிகப் பலவான புகழுரைகளை ஏத்திப் புகழ்ந்து கொண்டே வந்துளான் என முருகக் கடவுள் திருமுன்

கூறி நிற்கிறார்கள். -- =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/76&oldid=585962" இலிருந்து மீள்விக்கப்பட்டது