பக்கம்:முருகன் காட்சி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

செங்கே ழடுத்த சிவனடி வேலுத் திருமுகமும் பங்கே கிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க் கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரன் என எங்கே கினைப்பினும் அங்கேஎன் முன்வந்து எதிர்

நிற்பனே. சயிலம் எ றிந்தகை வேற்கொடு

மயிலினில் வந்தெனை யாட்கொளல் சகமறி யும்படி காட்டிய குருங்ாதா எனவரும் அப்பெருமானது அருள்வாக்குகள் பலப்பல: இவ்றாறு நம் பெருமக்கள் முருகனைக் கண்டும் , நமக்கு அவர்களது திருவாக்குகளினால் காட்டியும் அருள் புரிந்தார்கள்.

== இந்த அருட்செயல்களை எனது அன்பர் திரு, சி. பால சுப்பிரமணியன், எம். ஏ, எம். லிட்., அவர்கள், ஒரு நூல் வடிவமாக வடித்து வழங்கினார். அன்பர் பாலசுப்பிர மணியன், நல்ல உள்ளமும், உணர்வும் உடையவர். பல நூல்களைப் பயின்றவர். அவருடைய நூற்பயிற்சியை இந்த நூலினால் அறிஞர்கள் அறிவார்கள். கருத்து ஒப்பு மையைச் சங்க நூல்கள் பலவற்றுள் இருந்து எடுத்துக் காட்டியிருக்கின்றார். திண்ணிய புலமையும் நுண்ணிய மதிநலமும் பெற்ற இவர் முருகனைக் காட்டும் அழகு உள்ளத்துக்கு உவகை தருகின்றது.

நக்கீரர். பரிபாடல் ஆசிரியர்கள், இளங்கோவடிகள், கச்சியப்பர், அருணகிரிநாதர், குமரகுருபரர், வள்ளலார், பிற அடியார்கள் கண்டு கா ட் டி ய கோலங்களை வகுத்தும், தொகுத்தும் தமிழுலகுக்கு உதவியுள்ளார்.

இன்னும் இத்தகு நூல்கள் பல எழுத இவருக்கு இளம்பூரணன் இன்னருள் புரிவானாக.

இதனை ஏனோரும் படித்துப் பயன் பெறுவார்களாக,

அன்பன்,

கிருபானந்த வாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/8&oldid=585966" இலிருந்து மீள்விக்கப்பட்டது